உலகியல்

விண்ணுக்கு ‘நாசா’ ஆள் போனால் வாழ்த்து,
செவ்வாயில் வெள்ளையராம்…புகழ்ந்து பாடு,
கொன்றனரே ‘ருவாண்டாவில்’ குமுறு! ஆஹா…
‘ஹொங்கொங்கில் சுதந்திரம் நீ ஆடு! ஆப்கான் –
பெண்களினை இழிவு செய்தால் பொறுக்கலாமோ?
பீரங்கியாய் முழங்கு! உலகின் தோழா…
உன்முகட்டில் தீயெழும் நின் ஒழுங்கைக்குள் உன்
உறவுமயில் ‘தலைகுனியும்’ விட்டுத் தள்ளு!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply