முழுமையானது

சொற்களுக்குள் வாழ்வைச்
சுருக்கிடுதல் சாத்தியமா?
சொற்களுக்குள் கனவை, சொற்களுக்குள் நனவை,
சொற்களுக்குள் அன்பை,
சொற்களுக்குள் கரிசனையை,
சொற்களுக்குள் இன்பத்தை,
சொற்களுக்குள் துன்பத்தை,
சொற்களுக்குள் வலியை,
சொற்களுக்குள் உருசி சுவையை,
சொற்களுக்குள் அற்புததருணத்தைச்,
சிறைப்பிடித்து
அவையவற்றின் உணர்வை
அறிந்திடுதல் சாத்தியமா?
சொற்களுக்கு இவற்றின் இயல்பை
உயிர்த்துடிப்பைப்
பற்றும் திறன்குறைவே…
முழுதுமிங்கு புரிந்திடுமா?
சொற்களையே மூலதனமாகக் கொண்ட கவி
அந்த இயல்பை அனுபவத்தை
முழுதுமாகச்
சொல்லிவிட மாட்டாது!
எந்தக் கவிதையாலும்
நூறு வீதம் அனுபவப்பகிர்வும் நிகழாது!
கவியொன்றை வாசிக்க…
கவிதையொன்றைக் கேட்டிருக்க…
ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு அனுபவமே
விரிதல்… ‘அது’ முழுமை பெறவில்லை
என்பதைத்தான்
காட்டிடுது
‘குறைபாடு எதில்லை நீ கூறு?’
கவிதைக்கு மட்டுமல்ல எந்தக் கலைகளுக்கும்
இது பொருந்தும்
அதுவே நானாக… நாங்களாக
நீயாக எப்போதும் மாறிவிட முடியாது!
கவிகவிதான் நாம் நாம்தான்
வேறுபாடே ஏதுமற்ற
ஒருபிரதி கிடைக்குமென்றால்
கொடுத்துவைத்த தெம்ஊரு!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply