வேறு

பூக்களென நாங்கள் பொதுவாகப் பார்த்தாலும்
பூக்களெல்லாம் ஒன்றல்ல
அவற்றின் மணம் குணமும்
பூக்கும் நிறமும்
பூவின் இதழ்வடிவும்
பூக்கும் பொழுதும், பூவின் பயனும்,
காய்க்கும் விதமும், கனியும் விதமதுவும்,
வேறுவேறு!
ஊமத்தம் பூவும் அகத்தியதும்
வெள்ளை வெளேரென்று விரிந்தாலும்
ஊமத்தை
கொல்லைக்குள் சேராது
அகத்தி புறத்தியாக
தள்ளப்படும்… இரும்புச் சத்துமிகக் கொண்டாலும்!
பூக்கள் வடிவு,
பூக்களுக்கு அற்பாயுள்,
பூக்கள் நம் இஷ்டம் போல்
பூத்து வாழ்ந்துதிரும்
சீவன்கள் அல்ல, என சொன்னாலும்
அவையொவொன்றும்
வெவ்வேறு:
அவையவற்றின் விதியும் காண்…வேறுவேறு!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply