வாழ்த்தின் மதிப்பு

வாயாலே வாழ்த்தினாயோ?
மனதாலே வாழ்த்தினாயோ?
நானறிய வேணுமடா நண்பா!
பலபேர்கள்
வாய்நுனியால் வாழ்த்தி அடிமனதால்
மிகக்கறுவிச்
சாபமிடுவதையும்
சிலர்வளர வேணுமென்று
வாய்நுனியால் தூற்றி அடிமனதால்
வாழ்த்தி… நல்
ஆசி வழங்குவதைக் கூட
அறிந்தவன் நான்!
போலியாய்ப் பேசல்
போலியாயே புன்னகைத்தல்
போல இன்று வாழ்த்துவதும் போலியான
காரணத்தால்
வாழ்த்தியோரின் வாழ்த்து
வாயாலா மனதாலா
வாழ்த்தியது என்று அறியாமல் கேட்கின்றேன்!
மனதாலே வாழ்த்தாமல்
வாய்நுனியால் வாழ்த்துவதால்
வாழ்த்துக்களும்… இக்கால மனிதர்போல்
மதிப்பற்றுப்
போயினகாண்
என்று தான் உண்மையாக வாழ்த்தவுள்ளோம்?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply