சுவாதி

இரும்பு இரயில்கள் எண்ணற்று வருமிடத்தில்
குருதி இரயிலாகி…
தண்டவாளந் தேடிற்று!
ஆயிரம் விழிகள் அகலத் திறந்துபார்க்க
ஈனனின் கரங்கள்
எழுதிற்று மரணவேதம்!

வாயிருந்து கழுத்துவரை வெட்டுண்டு
இரத்தவெள்ளம்
பாய்ந்து பரவ…எந்தப் பதட்டமும் இல்லாமல்
பார்த்தனர் ம(மா)க்கள்…இரண்டுமணி நேரமாக!
சுவாதி சிதைந்தாள்…
அவள்மூச்சடங்கு முன்னம்
சக்கைபோடு போட்டன சமூக வலைத்தளங்கள்!
அக்கணத்தில் அவளுயிரைக் காக்க
அங்கே மனிதரில்லை!
கழுத்து அறுபட்டு ‘ஹலால்’ முறையில்
புனிதமான
விலங்கொன்றாய்
பூணூலின் புத்திரி அப்பொது வெளியில்
சாகடிக்கப் பட்டாள்!
சாவினையும் சாதியூடு
பார்க்கும் அரசியலில் பலியாச்சு மனிதநேயம்!
என்னதான் காரணங்கள் என்றாலும்,
சரி,பிழைகள்
என்ன யார் சொன்னாலும்,
கொன்றவனைக் கொன்றாலும்,
அன்பு, கருணை, பரிவு, இவற்றை
உலகிலெங்கும்
கொன்றொழித்து எதைத்தான்பின்
கொண்டுவரும் நாகரிகம்?
This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply