நாம்

கலைகிறது முகிலினமெம் கனவு போலே!
கரைகிறது கற்பூரம் மனது போலே!
தொலைகிறது வசந்தங்கள் நனவு போலே!
துடிக்கிறது உளம் பல்லி வாலைப் போலே!
உலைக்கொதிப்பாய் இருந்தது ஊர்…இன்று ஆறி

ஊற்றிவிட்ட கஞ்சி போலே…இழிந்து கீழே!
வலைவிரித்தே வீழ்ந்தவர்நாம்…கருவா டாகி
வாடுகிறோம் குற்றுயிராய்…வதங்கும் வாழ்வே!

 

மீட்சிவரும் மீட்சிவரும் என்று கொக்காய்
மீன்தேடி வரண்டகுளத்தடி நிற்கிறோம்!
காட்சிமாறும் கானம்மாறும் கோலம் மாறும்
காத்து…நாடகம் முடிந்தும் அரங்கில் உள்ளோம்!
ஆட்சிமாற்றம் அனைத்தினையும் தேற்றும் என்ற
ஆரூடம் பொய்த்தும் அதை விட்டால் வேறு
சூழ்ச்சிசெய்தும் வெல்ல வலுக்கெட்டோம்! வாக்கின்
துணை ஒன்றே துணை…அதையும் பிரிக்க நிற்போம்!
This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply