பூமழைப் பொழுது

வேப்பம்பூ ஒவ்வொன்றும் துளிகளாச்சு!
முற்றத்தில்
வேப்பம்பூ மழைபொழிந்து
வேப்பம்பூ வெள்ளம்
காலடியிற் பரவிற்று!
என்மகளவ் வெள்ளத்தில்
தோணிசெய்து விட்டாள்!
மழைக்குளிர் வருடுவதாய்…
வேப்ப மரக்காற்று குளுமையொடு
வேப்பம்பூ
வாசம் கலந்து மூச்சின் அழுக்ககற்ற…,
பார்த்திருந்த பாட்டி வெள்ளத்தை
வடகமாக்கக்
கூட்டத் தொடங்க…,
தோணி கவிழ்ந்துபோன
சோகவெள்ளம் வீட்டையிப்போ சூழ்ந்து மருட்டிடுது!
பூ உதிர்த்த வேம்பு
புதிராய்ச் சிரிக்கிறது!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply