உயர்ந்தவன்

எல்லாத் திலும் ஒருவன் உயர்ந்தவனாய் ஆகிடுதல்
சாத்தியமே தானா
இச்செக வாழ்க்கையிலே…?

ஒருவன் உயரத்தில் உயர்ந்தவனாய் இருந்திடலாம்,
ஒருவன் நிறத்தில் உயர்ந்தவனாய் திரிந்திடலாம்,
ஒருவன் அழகில் உயர்ந்தவனாய் திகழ்ந்திடலாம்,
ஒருவன் அறிவில் உயர்ந்தவனாய் மிளிர்ந்திடலாம்,
ஒருவன் கலைகளில் உயர்ந்தவனாய் வளர்ந்திடலாம்,
ஒருவன் விளையாட்டில் உயர்ந்தவனாய் ஒளிர்ந்திடலாம்.
ஒருவன் பலத்தில் உயர்ந்தவனாய்த் திமிர்ந்திடலாம்,
ஒருவன் வீரத்தில் உயர்ந்தவனாய் நிமிர்ந்திடலாம்,
ஒருவன் பணத்தில் உயர்ந்தவனாய்ச் செழித்திடலாம்,
ஒருவன் பண்பில் உயர்ந்தவனாய் மலர்ந்திடலாம்,
ஒருவன் பிறப்பில் உயர்ந்தவனாய் மகிழ்ந்திடலாம்,
ஒருவன் சாதியில் உயர்ந்தவனாய் நினைந்திடலாம்,
ஒருவன் சமூகத்தில் உயர்ந்தவனாய்ச் சிலிர்த்திடலாம்,
ஒருவன் மதத்தில் உயர்ந்தவனாய் தெளிந்திடலாம்,
ஒருவன் இனத்தில் உயர்ந்தவனாய் நடந்திடலாம்,
இவைபோல…இன்னுமின்னும்
எத்தனையோ இயல்புகள்
ஒவ்வொன் றிலுமொருவன் உயர்ந்தும் மிளிர்ந்திடலாம்!
இவற்றில் அனைத்தில்,
இவற்றில் அனேகமானவற்றில்,
உயர்ந்தவன்தான் ‘உண்மையான உயர்ந்தவனாம்’
இதே…உண்மை!!
இவற்றில் ஏதோஒன்றில் உயர்ந்தவனை
“இவனேதான்
உயர்ந்தவன்” எனப்போற்றல் உலகமகா மடமை!
ஒவ்வொரு வனும் ஏதோ ஒருவிதத்தில்,
ஒருஇயல்பில்,
இவ்வுலகில் உயர்ந்தவன்தான்…
ஏனையதில் தாழ்ந்தவன்காண்…
என்பதை மனிதரின் ஆறாம் அறிவுகூட
இன்னும் புரியவில்லை…என்பது
நம் சாபநிலை!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply