முற்றுப் புள்ளிகள்?

அமைதிக் கதைக்குவைக்கப் பட்ட
குருதிதோய்ந்த
இரு ‘முற்றுப் புள்ளிகளா’ நீங்கள்?
பொதுவாக
ஒரு ‘முற்றுப் புள்ளி’ முடிவு:
நும்மரணம்
இரண்டு…இது ‘தொடர் இசைக்குறி’ எனத்தானே
பொருளைத் தரும்…? நேற்றுப் புள்ளிகளை
வைத்தவையோ
பேனாக்கள் அல்ல…
துருப்பிடித்த துவக்குக்கள்!
எழுதியோரோ காவலர்கள்,
இலாபமீட்டும் அரசியல்கள்,
சூடு பிடித்தன செய்தி வியா பாரங்கள்!
பாவி களாய்அப் பாவிகளாய்
பலிக்கடாக்கள்
போலாய்த் தொலைந்தீர்கள்…
முடியலையோ ஈகங்கள்?
“பாவ மன்னிப்பா?
பழிக்குப் பழிதானா?
வேண்டும் பொறுமைகாப்பா?
தட்டியே கேட்பதுவா?”
மீண்டும் உலகளாவ எழுந்தன…
விவாதங்கள்!
சாந்தி சமாதானம் சகவாழ்வு சமத்துவம்
நீதி நியாயம் நிஜத்தீர்வு
என வேறு
கதைகளும் திகைத்துளன…
கலங்குது ஏழை ஏக்கங்கள்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply