அழுக்கு

அழுக்கை மிதித்தது செருப்பு…
நீரூற்றிக்
கழுவினேன்:
புதிதைப்போல் கலக்கிற்று அது! நேற்று
அழுக்காச்சு உடுப்பு…
அலம்பித் துவைத்துவிட
அழுக்கறுத்து வெண்மை பளீரிட்டது அது! இன்று
அழுக்காச்சு உடம்பு…
அருவருப்பை மறந்துநன்றாய்
முழுகிக் குளித்தேன்:
முழுதும் புனிதமாச்சு!
அழுக்காகும் மனது அனுதினமும்…
என்செய்து
அழுக்கறுத்து தூயதாக்கு வேனோ?
அறியாது
அழுக்கேறி… வழிதேடி…
அலைகிறது என்மனது!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply