தந்தை ஈகம்

“இரத்தத்தை பாலாக்கி ஊட்டினாளாம் நம் அன்னை…”
பெரிய விடயம் தான்.
ஈகத்தின் உச்சம் தான்.
என்றாலும் தந்தை என்றொருவர் அங்கில்லை 
என்றிருந்தால் ….இரத்தம் 
எப்படித்தான் பாலாக 
மாறி இருந்திருக்கும்?
மன்னிப்பீர்…..
தந்தையரும் 
காரணமாம் தாய்ப்பால்க்கு!
இரத்த நிறம், மணம், குணத்தை 
மாற வைக்க தந்தையர்தான் வேண்டும்!
வெறும் கன்னி 
பாலாக்க முடியுமா இரத்தத்தை?
அவ்ளதாயாய் 
மாறினாற்தான் உயிர்மாற்றும் இரத்தத்தை…
இதைத்தேறு !
காமன் மட்டுமல்ல தந்தை…. காமத்தின் பின்
காவலன் அவன்காண்…
கருணை அவனிலுமுண்டு!
யாரும் நினைப்பதில்லை இதை…
கவலை எனக்குமுண்டு!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply