ஏன் ?

‘சிறுத்தீவுக்’ கடலில்
சிறிய ஒரு ‘குல்லாவில்’
பொறிகளான’ஆறு ‘ ஒரேவயது இளம்புதிர்கள்
உற்சாக பிறப்பு கொண்டாட்ட
மயக்கத்தில்
நிற்க…கடலன்னை
‘சரவணப் பொய்கை’ என
ஒன்றாய் எடுத்தணைத்தாள்!
பெற்றோர்க்கும் உற்றோர்க்கும்
என்ன ‘அறம் ‘ சொல்ல இதைச் செய்தாள்?
மூன்று ‘பாகத்’
தண்ணீர்ப் புதைகுழியை
கண்ணீர்ப் புதைகுழியாய்
மாற்றி உயிர் புதைத்தாள்!
‘மாணவம்’ எதை உணர
கூற்றாகி ஆறு உயிர்குடித் தமைதியானாள்?

Leave a Reply

You must be logged in to post a comment.

கவியரங்கக் கவிதைகள்
பெரியோர்கள் போற்றுதும்..
எனது புதிய பதிவுகள்
ஒலிப் “பதிவு”
ஒளிப்பதிவுவெளியீடுகள்

முகப்புத்தகத்தில் தொடர
வருகைதந்தோர்
  • 4This post:
  • 51496Total reads:
  • 37533Total visitors:
  • 0Visitors currently online:
?>