தீராப் பலிகள்

யாருடைய தலையை எடுத்து வருகிறாளோ
‘யாழ் தேவி’?
பாவம் என்செய்வாள் அவள் ‘இரும்பி’!
தேடி உனைத்தேடி திரியவில்லை அவள்:
நீயாய்த்
தேடி அவள்வரும் திசைஏறிப்
பொறுமையற்றுப்
போவாய்…..
அவளோ ‘புயலாள்’…நெரித்தழிப்பாள்!
யார் பேச்சும் கேட்காளை,
யார் மறித்தும் நிற்காளை ,
“பாவி ” எனத்திட்டிப் பயனென்ன என்னுறவே ?
‘மோனியா’ அவள் ?
சின்ன மூஞ்சூறு போல் ‘அளவா’?
பேய் போல் பிளிறி அப் ‘பிரமாண்டினி’ வரத் ….
தெரியாப்
பேதையாய்….உனது
அவசரப் புத்தியினால்
பாய்ந்து …” ‘கடவை’ பூட்டாத பிசகினாலே —
தான் கடந்தேன்”….என்று
தப்பையுன்மேல் வைத்தபடி
மோதியவள் காதலிலே
மூச்சோடு முகம் சிதைந்து
சாவது ஏன் நித்தம் ?
சாற்று என் சோதரமே…?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply