உங்கள் கவிதைகளை நான் எழுத முடியாது

நீரே எழுதும் உம்முடைய கவிதைகளை!
நீரே எழுதும்
நீர் விரும்பும் கவிதைகளை!
நீரே எழுதும்
உம் பாணிக் கவிதைகளை!

நீரே எழுதும் உமக்குப் பிடித்தவையை!
நீரே எழுதும் நீர் எழுத வேண்டியதை!
நீரே எழுதும் உம்
கொள்கை கோட்பாட்டை!

ஏன் நீங்கள் என்னிடம்
உங்கள் கவிதைகளை,
ஏன் நீங்கள் என்னிடம்
உம்போல் கவிதைகளை,
ஏன் நீங்கள் என்னிடம்
நீர் எழுத விரும்பியதை,
நானெழுத வேண்டுமென்று நாண்டு
சட்டம் போடுகிறீர்?
நான் என் கவிதைகளை,
எனக்கு வருவதனை,
ஆம்…எனக்கு பிடித்ததனை,
என் கொள்கை கோட்பாட்டைத் ,
தான் எழுதுவேன்!
எனது பாணியை தனித்துவத்தைத்
தான் என்றும் புனைந்திடுவேன்!
எப்படி அதை மறிப்பீர்?
உம்முடைய கவிதை கம்பனின் கவிபோலாய்….
என்னுடைய கவிதை
கடைநிலைக் கவிதையுமாய்….
இருந்துவிட்டுப் போகட்டும்!
உமது கணிப்பு பற்றி
சிறிதும் கவலைகொள்ளேன்!
நீர் ஏற்றுக் கொண்டாலும்….
ஏற்காது விட்டாலும்….
நான் என் கவிதையைத்தான்
நாளையும் எழுத உள்ளேன்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply