வழித்துணைகள்

பூவுக்குத் தேனாய்,
பொன்னுக்கு ஒளியாய்,
வானுக்கு நிறமாய்,
மண்ணுக்கு மணமாய்,
மானுக்கு வேகமாய் ,

மயிலுக்குத் தோகையாய்,
நாளுக்குப் பகலிரவாய்,
நதிக்குக் கரை அலையாய்,
வார்த்தைக்குப் பொருளாய்,
மனதுக்கு நினைவுகளாய்,
ஆம்…. எனக்குத் துணையிருக்கென்
அகத்தினிலே கவிதைகள்!
யான் துணைகள் இல்லாத அனாதையில்லை
என்றுரைக்கும்
யான் படைத்த கவிதைகள் !
அவையே என் வழித்துணைகள் !

Leave a Reply

You must be logged in to post a comment.

சமீபத்திய பதிவுகள்
கவியரங்கக் கவிதைகள்
பெரியோர்கள் போற்றுதும்..
எனது புதிய பதிவுகள்
ஒலிப் “பதிவு”
ஒளிப்பதிவுவெளியீடுகள்

முகப்புத்தகத்தில் தொடர
வருகைதந்தோர்
  • 39This post:
  • 65671Total reads:
  • 48632Total visitors:
  • 0Visitors currently online:
?>