பண்புடைமை

மரணத்தை விடவுமோர் மாபெரிய தீர்ப்பேது?
மரணத்தில் ஒருவர் மரணத்தில்
அவர் தவறைச்
சுட்டி அவர்புகழைத் தூற்றி
இழிவு செய்தும்,
சற்றுமே நாகரிகம் இல்லாமல்
சபைகூட்டி
அன்னாரைப் பழித்தலும்
அனைத்து வலைத் தளங்களிலும்
புன் மொழிகள் பேசலும் பொருத்தமில்லை!
இவ்வுலகில்
நூற்றுக்கு நூறுபுள்ளி பெறத்தக்க நூதனரைக்
காட்டிடுதல் சாத்தியமே இல்லை!
கசிந்துருகி
அஞ்சலித்துப் ‘போனவரின்’
ஆத்மாக்குப் பிரார்த்தித்து
விஞ்சுகிற ஓரிரண்டு அவர்பெருமை
விதந்துரைத்தல்
பண்பு;
அதே சிறந்த பண்பாடு!
மறைந்தவர்க்கு
மரணத்தை விடவுமோர் மாபெரிய தீர்ப்பேது?
மரணத்தின் பின்காலம் மதித்து
தன் தராசினிலே
நிறுத்து எடைபோட்டு நிர்ணயிக்கும்
ஒவ்வொருவர்
வாண்மைகளை! பெருமைகளை!
வடுக்கள் சிறுமைகளை!
மாண்புகளை!!
யாரினதும்….வசைபாடல் தீர்மானம்
செய்யாது வரலாற்றை!
தேய்க்காது அவர் புகழை!
பொய்மைகளைப் புகழ்ந்தாலும்
போற்றாது விதி….அவற்றை!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply