சிறப்பு

பார்த்துக் கொண்டிருந்தேன்
பரந்த பெருங் கடலை ….
பார்க்க விரிந்து கடலளவாய் ஆச்சு மனம்!
நீந்தத் தொடங்கினேன்
நெடிய அலைகடலை….
நீந்த அதன் நீளமாக நெடுத்தது என்நினைவு!
மூழ்கத் தொடங்கினேன்
முடிவற்ற கடல் ஆழம் ….
மூழ்கிப் புதுமைமுத்துப் பலசேர்த்த
தென் அறிவு!
சுவைக்கத் தொடங்கினேன்
துளித்துளியாய் அக் கடலை….
சுவைக்க…அதன் கரிப்பில்
தொலைந்தது என் நாக்கு!
ஒன்று விளங்கிற்று;
எதும் ‘ஒன்றின்’ …ஓரிரண்டு
நன்மை, சிறப்பைமட்டும் பாராமல்
அதன் எல்லா
இயல்பு களும் சிறக்கும் எனநினைத்து
ஆராய்ந்தால்
வியப்பன்றி வெறுப்பு மிஞ்சும்!
மனிதருக்கும் இது பொருந்தும் !

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply