முகம்

முகத்துடனே வந்தாய் என் முன் என்று
தான் இருந்தேன்!
முகமூடி அது என்று
முடிவில் தான் கண்டுகொண்டேன்!
முகமூ டியே முகமாய் மூட,
முழுதாக
அதை முகமாய் நம்பி
அதற்கு மரியாதை
பலசெய்து ஏமாந்த பாவிநான்;
நீ மிகவும்
சுலபமாய் முகமூடி கழற்றி…
கையில் சுழற்றி….
அடுத்தவனை ஏமாற்ற
கைகாட்டிப் போகின்றாய்!

அவனினது….முகமோ முகமூடியோ…என்று
அவதானம் கொள்; இல்லாட்டில்
என்னைப் போல் நீ….ஆவாய்!

24.01.2018

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply