சாபம்

கனவுகளின் சாம்ராஜ்யம்
கண்முன் கருகிவிட
நனவுகளும் நீறியே
சாம்பலான நன் நிலத்தில்
அங்கங்களை இழந்தும்,
அன்புறவை இழந்தும்,
சொந்தங்களைத் தொலைத்தும்,
சொத்து சுகம் தொலைத்தும்,
அன்னை தந்தையை விட் டகன்றும்,
ஏதோ விதத்தில்
அநாதைகளாய் மாறி
அநாத இரட்சகர் யாரும்
நினைத்துமே காத்து நிழல் செய்யா
நிஜ வெயிலுள்
யார்யா ரிடமோ இரந்திரந்து
படிப்படியாய்
ஏறி இறங்கி
ஏதோ அரை வயிறுச்
சோறுக்காய்ச் சுற்றி
அமைதியின் துயரை
நாளும் அனுபவிப்போர் நாவின்
கொடுஞ்சாபம்
நாளை இம் மண்ணினது
நனவை என்ன செய்திடுமோ?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply