வெளிச்சம்

கருவி பிழைவிடாது கடைசிவரை
என உரைத்து
கரங்கள்தான் பிழையை விட்டு இருக்கவேணும்…
பொறுக்கிய போதல்ல
அனுப்பிய போதென்று…அவ்
வழிப்போக்கன் சொன்னான்!
வாஸ்த்தவமாய் இருந்தாலும்….
பழிசொல்லக் கூடாது;
பாவம் விடாதந்த
எலும்புகட்கே வெளிச்சமென்றேன்!
இல்லை …அதிகாரக்
கலியில் எதும் நடக்கும்
கடவுளுக்கே வெளிச்சமென்றான்!
விழிகளோ தேடுதெதும் வெளிச்சத்தை…
காத்துள்ளேன்!

Leave a Reply

You must be logged in to post a comment.

கவியரங்கக் கவிதைகள்
பெரியோர்கள் போற்றுதும்..
எனது புதிய பதிவுகள்
ஒலிப் “பதிவு”
ஒளிப்பதிவுவெளியீடுகள்

முகப்புத்தகத்தில் தொடர
வருகைதந்தோர்
  • 12This post:
  • 72313Total reads:
  • 53235Total visitors:
  • 0Visitors currently online:
?>