ஆதிக்கம்

என் முகத்தோ டாழ முடியாது எந்தனுக்கு!
என் விருப்பில் வாழ
இடமில்லை எந்தனுக்கு!
என் பாஷை பேச,
என் உணவை உண்ண,
என்னுடை உடுக்க,
என் இயல்பில் நடக்க,
என் கவியைப் பாட,
என்னிசை இசைக்க,
என் ஆசை சொல்ல,
என் மிடியைப் பேச,
என் வழியில் செல்ல இயலாது எந்தனுக்கு!
என் விருப்பில் என் இயல்பில்
என் பாட்டில் நான் இருந்தால்…
என்னை இழிவு செய்வீர்!
ஏதுமொரு வரம் கேட்டால்
உங்களைப் போல் மாறின்
உடனே தருவமென்றீர்!
உங்களைச் சரண் புகுந்தால்…
உம்மைப் பின் பற்றிநின்றால்…
உங்கள் வழி வந்தால்…
உங்களைப் போலே வாழ்ந்தால்…
உங்களைப்போல் வார்த்தைகளை உச்சரித்தால்….
கத்தி முள்ளால்
உங்களைப்போல் உண்டால்…
உம்போல் உடை புனைந்தால்…
உம்போல் நடந்தால்…
உம்போல் நடித்தால்…
உம்கவியைப் புகழ்ந்தால்….
உம் பாட்டைப் பாடிவிட்டால்…
உங்கள் உளத்துக்கு ஏற்ப
நடந்து வந்தால்
உங்களைப்போல் எந்தனையும்
உலகில் உயர்த்தி வைப்பீர்!
இல்லையெனில் எப்படியும் என்னை
இழிவுசெய்து
தொல்லை கொடுத்து நானே
துறவுபூண வைத்திடுவீர்!
ஆனால் அதற்கெல்லாம் யான் அசையேன்!
என் இயல்பில்
வாழ்வேன்!
உங்களையும் தாண்டிப் பெருங் காலம்
வாழவைக்கும்!
நம்பி என்வழியில் நடக்கின்றேன்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply