வளர்த்த வலி

முள்ளுச் செடியென்று முதலே அறியலைநான்.
பிள்ளைப் பருவத்தில்
பெரிதும் பசுமைபொங்கச்
சாதுவாய் இலைகள் தளிர்க்க இருந்ததது!
பார்க்க அழகாயும்,
பழக எளிதாயுங்
கூட இருந்ததது! கொஞ்சம் தளிர்த்தபின்பு
கிளைகளின் கீழும்,
இலைகளின் விளிம்பினிலும்,
முளைத்தன அரும்பரும்பாய் முட்கள்
அப்போதே
முள்ளுச் செடியென்றென் மூளைக் குறைக்கவில்லை.
தள்ளி…சில நாளகலச்
சடசடென்று விஸ்வரூபம்
கொண்டது கிளைத்து குலைகுலையாய் முள்தரித்து
நின்று நெடுநெடுத்து
அழகின் நிறைகுறைந்து
வன்மத்தோ டுயர்ந்து வானைக் கிழித்ததது!
களையவே வேண்டிய
காட்டேறி மரமதனை
இளமையிலே களையாமல் விட்டதற்காய்…
வருந்துகிறேன்.
செழித்த அதைவெட்டச் சென்று
அதென் கைகளையே
கிழித்து எனைச்சாய்க்க… அதைவீழ்த்தி என்முற்ற
எழிலை நிழலை எனக்காக்கி
எமைக்காக்கும்
வழியைத் தெரியாமல் வலியால் வருந்துகிறேன்.

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply