பிறவி ஒரு சிறை

எவரின் பிறப்புக்கும் அவர்கள் பொறுப்பொடா?
எவர் பிறப்பும் அவர்கள் விரும்பித்தான்
புவியில் வாய்த்ததா? எங்கு எச் சாதியில்
போய் எவளின் வயிற்றில்… யார் விந்தினில்
தவிசில் செத்தையில்…. தாழ்வு உயிர்வினில்
அவதரிப்பது என்பதை முன்னமே
நவீன யுத்தியால் அறியவும் கூடுமா?
நம்பிறப்பு யார் கையில்?யாம் கண்டமா?

இங்கே பிறந்து விட்டேன் எனநொந்து
ஏதும் நேருமா?ஏன் இந்தக் கீழ்மைக்குள்
இன்று பிறந்தேன் என அழுதாகுமா?
இது விதி வினைப்பயனெனும் சாத்திரம்
எங்கு தேடியும் பிறப்பின் இரகசியப்
புதிர் அவிழ்ப்பதும் சாத்தியம் ஆகுமா?
எம்பிறப்போர் சிறை தானா? அதைத்தாண்டி
இறைநிலை எட்ட முயல…முடியுமா?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply