தர்மமாய்ச் சேர்ந்த தனம்

காய்ந்து அனற் சூளையில்
சுடுபட்ட மட்பாண்டம்
நீர் ஒழுகச் செய்யாதே!
நீ தரும வழிநின்றால்
காய்ந்து வறுபடுவாய் துயர அனற் சூழையிலே!
நாளும் சுடுபட்டு
உறுதியான மட்பாண்டம்
போலாகி அறநெறியில்
சேர்ந்த செல்வத்திரவியங்கள்
யாவையையும் சேமித்து வைப்பாய்!
அதர்மவழி
நீபோனால்…நின்னை யதார்த்தத் துயரங்கள்
காய்ச்சிடாதே நீயும்
கழிமண் குழைத்த பச்சை
பானையாய் இருந்து பழியோடு சேர்கின்ற
செல்வத்திரவியங்கள் சேர்த்து உனக்கும் சுவறாது
மெல்ல மெல்ல நீயுந்தான்
கரைந்து மடிந்துபோவாய்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply