நட்பு

என் வீட்டின் ஜன்னல்கள் இன்று திறந்திடுமா
என்பதனை வெயிலொளியும்
காற்றும் மழைபனியும்
தீர்மானஞ் செய்வதனை தேர்ந்தேன் நான் இன்று என்
ஜன்னல்கள் இவற்றோடு தானுறவா?
இல்லையெனில்
என்வீட்டு ஜன்னலகள் எனக்குறவா கேட்டபடி
ஆருக்கு உறவென்று
அதற்குப்பட்டெனது
ஆதிக்க எஜமான் தனத்தை நிரூபிக்க
ஜன்னல்களைச் சாத்திவிட்டு உள்ளமர்ந்தேன்!
வரமுயன்ற
அன்னியர்கள் திரும்பினார்கள்!
ஆனால் மிகப்புழுங்கி
மூச்சுமுட்டி உள்ளிருக்கமுடியாமல்
ஜன்னல்களை
திறந்துமீண்டேன் வீட்டின் உள்ளிருந்த வெற்றிடத்தை
அந்நியர்கள் ஆக்கிரமித் தென்னையிப்போ
அந்நியமாய் மாற்றிறது
என்வீடும் எனை முறைத்துப்பார்த்திருக்கு!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply