நம் திருநாட்டு மான்மியம்!

கடல் கொஞ்சி மகிழ்கின்ற திருநாடு – இன்று
கரியோடு சதைநாறும் இடுகாடு
கடன் வாங்கிப் பலிவாங்கும் கறை வீடு – கொண்ட
கவலைக்கு முடிவென்று வரும் கூறு?

சடலங்கள் மலிவான கடையாகும் – இங்கு
சமதர்மம் விலையான பொருளாகும்
விடம்தானே பலர்க்கிங்கு பரிசாகும் – என்றால்
விழுகின்ற எமக்கேது எதிர்காலம்?

வெடிகுண்டு பசியாற உணவுண்டு! – தீர்ப்பை
வழங்காதோர் விளையாடத தலையுண்டு!
குடிபேர்ந்து குடிபேர்ந்து இடியுண்டு – மாளும்
குலத்துக்கு ‘மருந்தாக’ எதுஉண்டு?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply