நிழல் உறவு

நிழலினது தந்தை… வெளிச்சம்.
அதன் தாயோ
ஒளி ஊடு புகவிடாத ஒருபொருள்.
இவை புணர
நிழல் பிறக்கும்!
தந்தை சொல் கேட்டு Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on நிழல் உறவு

புதிர்கள் அவிழ் நீ!

வாழும் வழிகாட் டிடுவாய் முருகா!
மாய வினைகள் தனில் தீ யிடுவாய்.
ஆளும் மனமும், அறம் சேர் கவியும்,
ஆரா அமுதே அருள்வாய். தருவாய்! Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on புதிர்கள் அவிழ் நீ!

கனவுகளின் புகழ்

கனவுகள் என்மேல் கவியத் தொடங்கின; ஆம்
மனமும் உடலும் மயங்கி
உறக்கத்தின்
பிடிக்குள் கிறங்க
எங்கெங்கிருந்து வந்தோ
படிந்தன கனாக்கள்! Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on கனவுகளின் புகழ்

பாதைகள்

பாதைகள் முடிந்ததில்லை.
யார் யாரோ பயணித்துத்
தேவையென அன்றொருநாள் செய்தும், திருத்திவைத்தும்,
போட்டுவைத்த பாதைகள்
புயல் மழைக்குள் புதைவதில்லை.
வாட்டிய வெயில் அனலுள் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on பாதைகள்

நீதி, நியதி.

பொய்கள் முதலில்
பொங்கிப் பிரவகித்து
மெய்களை விழுங்கி விடுமெனிலும்,
பரபரப்புப்
பொய்கள் ஜெயிப்பது போல இருந்திடினும்,
பொய்களைப் பலரும் போற்றிடினும், Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on நீதி, நியதி.

பேதப் பாடல்

காற்றினது பாடல்கள் கலந்தன ககனமெங்கும்.
காற்றினது கீதங்கள்
கரைந்தன திசைகளெங்கும்.
கடலினது பாடல்கள் கடக்குந்
தொடுவானெங்கும்.
மேகத்தின் பாடல்கள் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on பேதப் பாடல்

கடன்

இந்த மண்ணது எங்கள் மண்ணென
இன்று சொல்லிடக் கூடுமோ?
எம் சிறப்புகள் எம் தனித்துவம்
இங்கு இற்று நீர்த்தோயுமோ?
அன்னை மண் முகம் மாறுமோ? அயல் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on கடன்

உண்மை

உண்மைகளை எல்லோரும் உணர்வார்…சாகா
உண்மைகளை யாவரும்தான் மதித்து நிற்பார்.
உண்மைகளை எவரும் மறு தலிக்கார்…என்றும்
உண்மைகள்தாம் வெல்லும் என்றுரைப்பார். ஏற்பார்.
உண்மையதன் பெருமையை எல்லோரும் காண்பார்.
உண்மைகளின் கசப்பினையும் ஊரார் தேர்வார். Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on உண்மை

நம்பு

சொந்தம் யாவுமே வந்த போதிலும்
துன்பம் நூறும் தொலையுமோ?
சூழும் தீயிடர்… சொல்லும் வார்த்தையில்
சோர்ந்து சாய்ந்து கருகுமோ?
நொந்த மேனி, மனத்தின் காயம், நோய்,
நூல்கள் கட்ட மறையுமோ? Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on நம்பு

ஓரறிவும் ஆறறிவும்.

மரத்திற்குத் தெரியுமா அதனின் இலையுதிர்வு?
மரங்கள் உணருமா
இலைகளின் பிரிவுவலி?
இயல்பாய் முதிர்ந்த இலையின் உதிர்வு…மர
உயிரை உலுப்புமா?
இல்லை எதும் சலனம் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on ஓரறிவும் ஆறறிவும்.

வரவேணும்…வரம்வேணும்!

கவிதை எழுத வரிகள் நனவில்
கனவில் மனதில் தருவோனே.
கருணை பொழியும் விழியின் வழியில்
கருமம் நிகழ அருள்வோனே.
புவியில் எனது பொருளும் பொலிய
புதுமை நிதமும் சொரிவோனே. Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on வரவேணும்…வரம்வேணும்!

மறக்குமோ?

நெஞ்சிலே நிதம் சஞ்சலம் எழ
நிம்மதி… மனம் கேட்டதே!
நீசமே தரும் வெவ்விதி…எனை
நித்தம் சிப்பிலி ஆட்டுதே!
அஞ்சல் என்றெனை ஆதரித் திட
ஆருமில்லை அயலிலே! Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on மறக்குமோ?

கனவின் சிறகுகள்

சிறகுகட்டி எங்கெங்கோ சென்று வரும் கனவு!
வெறும் காலால் மட்டும்
இவ்வளவு வேகமாக
வெவ்வேறு திசைகட்கு விரைந்தேக முடியாது!
அவ்வளவு வேகமாக
அடுத்த அடுத்த நொடி Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on கனவின் சிறகுகள்

ஏன் தான் நிமிரலை இன்னும்?

துன்பம் எனும் கடல் ஏறிக் கடந்திட
தோணி கிடைத்திட வில்லை- அட
துடுப்பும் அகப்பட வில்லை -கடற்
தண்ணியைத் தாண்டிட நீச்சல் தெரியலை
தாங்கி முக்குளிக்குமெம் எல்லை – தாண்டின்
தாழ்வோம்…எதும் மீட்சியில்லை! Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on ஏன் தான் நிமிரலை இன்னும்?

மந்திர என் கவி

வானமும் வையகமும் -என்றும்
வாழ்த்தும் படி வரம் கேட்டிடுவேன்.
ஞானத்தின் பேரொளியில் – தோய்ந்து
நாளையை ஆளும் முறைதெரிவேன்.
ஈனங்கள் போக்குதற்கு -இன்றும்
என் செய்ய வேண்டுமென்றே முயல்வேன். Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on மந்திர என் கவி