செங்கைஆழியான் இன் கடிதம்

7. DR.K.Kunarasa,
B.A. (CEY), M.A., Ph.D., SLAS
No: 82, Brown Road,
Neeraviyady, Jaffna
24.09.2002.

அன்புள்ள த.ஜெயசீலன் அறிவது,

வணக்கம்,

தங்களது கவிதை நூல் ~கனவுகளின் எல்லை| சம்பந்தன் விருதுத் தேர்வுக்குட்படுத்தப்பட்டது என்பதை அறியத் தருகின்றேன். புதிய சொற்களையும் புதிய செய்திகளையும் கொண்ட உமது கவிதைகள், இலக்கிய வடிவிற்கு அணி சேர்ப்பன. வித்தியாசமான பாடுபொருள். உதாரணம் – நட்பு. உமது கவிதைகள் விரிவான ஆய்வுக்குட்படும் தகுதி படைத்தன.

வாழ்த்துக்கள்

அன்புடன்,
செங்கைஆழியான்