ஏற்றங்கள்பெறுகவென்று!

ஐம்பதுஅகவைதன்னில்
அடிகளைஎடுத்துவைக்கும்
தும்பன்; ‘வேலணையூர்’ மன்னன்.
சுரேஸ்எனும்கவிதைவிண்ணன்.
செம்பொருள்தேடான்…தேடிச்
சிந்துகள்சேர்ப்போன்…பாவில்
வம்புகள்புரியும்அன்பன்!
வாழ்கநம்கவிதைநண்பன்!

இசைப்பாட்டு, எழுச்சிப்பாட்டு,
எண்ணற்றதனிப்பாயாத்து
விசைகொண்டுபோர்க்காலத்தில்
விடிவுக்காய்உழைத்தகாற்று!
திசைஎட்டின்கோவில்கட்கும்
தெய்வீகப்பாடல்தந்து
அசத்தினான்; வளரத்ததற்காய்
ஆர்க்கிறாள்…தாய்‘யாழ்இந்து’!

பொன்விழாகாணும்எங்கள்
புதுமை(வ)யின்சீடன், இன்னும்
இன்னும்பா, இசைப்பாதந்து
எம்வளிகுளிரவைத்திம்
மண்வாசம்எட்டுத்திக்கும்
பரப்பியேவாழ்கநன்று!
இன்தமிழ்காக்கும்…மேலும்
ஏற்றங்கள்பெறுக…வென்று!