நாமம்நீடூழிவாழ்க!

சமூகத்தின்ஏற்றத்தாழ்வைச்
சாடியே… அவற்றைமாற்றத்
தமதெழுத்ததனைநேற்றும்
தந்தவர்; கதைகள், நாவல்
தமையேபோர்வாளாய்க்கொண்டு
சமராடிஒளிர்ந்துஇன்று
அமரராய்ஆனஐயா
‘தெணியானுக்கு’ அஞ்சலிகள்!

நிமிர்நடை, நெடுத்ததோற்றம்,
நேர்கொண்டபார்வை, கொள்கைச்
சமரசம்செய்யாப் பேச்சு,
தளராதுமுயலும்வீச்சு,
எமனுக்கும், எவர்க்கும்அஞ்சாது
எண்ணத்தைஎழுத்தாய்மாற்றிச்
சமைத்திடல், வாழ்வில்செய்த
சாதனை, வியக்கவைக்கும்!

அடங்கியே நலிவோர் துன்பம்
அகிலத்துக்குரைத்தகாதை,
ஒடுக்கவேபட்டோர்ஏக்கம்
உலகுக்குஉணர்த்தும்நாவல்,
படைத்துமே…எழுத்தை‘நான்கு
படையாக்கி’ ஜெயித்தவீரர்!
அடங்காதகலைஞர், யார்க்கும்
ஆகர்ஷம்ஆனஅன்பர்!

எண்பத்துநான்குஆண்டு
ஏற்றங்கள்கண்டுவாழ்ந்து,
தன்சுற்றம்குடும்பம்காத்து,
சமூகத்தின்குரலாய்ஆர்த்து,
இன்றையதலைமுறைக்கும்
கலங்கரைஎன்றுநேற்றும்
நின்ற… நம்‘தெணியான்’ ஐயன்
நாமமும்வாழ்கநீடு!