நூல்மதிப்புரை : கைகளுக்குள் சிக்காதகாற்று நக்கீரன்

இன்றையஈழத்துத் தமிழ்க் கவிதைபற்றிச் சிந்திக்கும் எவருக்கும் த.ஜெயசீலன் பற்றியஞாபகமும் வரவேசெய்யும். அவரதுமுதலாவதுகவிதைத் தொகுதிவெளிவந்து,பேசப்படும்கவிஞராகஅவர் விளங்கத் தொடங்கியகாலகட்டத்தில்,அவரின் இரண்டாவதுகவிதைத் தொகுதியானகைகளுக்குள் சிக்காதகாற்று(2004) வெளிவந்துள்ளது. அவரதுவளர்ச்சியின் பிறிதொருபரிமாணத்தை இத்தொகுதி இனங்காட்டிநிறகின்றது.

இத்தொகுதியிலுள்ளகவிதைகளிற் பெரும்பாலானவை,தனிமனிதஉணர்வுகளின் வெளிப்பாடுகளாகவேவிளங்குகின்றன. அவைகவித்துவஅழகோடுவெளிவந்துள்ளன. தற்போதுவெளிவந்துகொண்டிருககும் பல்வேறுகவிதைத் தொகுதிகளிற் கணிசமானவைவெள்ளைத் தாள்களில் அச்செழுத்துகளைப் பதித்தவைகளாகவேவிளங்குகின்றன. அவைதரமானவாசகருக்குச் சலிப்பையேஊட்டுகின்றன. ஒருசிலகவிதைத் தொகுதிகளேமனங்கவர்கின்றன. இதில் ஜெயசீலனின் கைகளுக்குள் சிக்காதகாற்றுநூலும் ஒன்றாகும். அவரதுகவிதைகளைப் படிக்கும் போது, இனியகுளிர்நீர் அருவியிலேகுளித்தெழுகிறஅனுபவம் ஏற்படுகிறது. அவரதுகவிதைகள் வாசகரின் உள்ளங்களைநிறைக்கின்றன. மனம் போனபோக்கிற் செயற்படும் கவிஞர்களிற் சிலரைப் போல் அல்லாது,ஓசைவழிப்பட்டகவிதைகளைப் பொருளாழத்துடன் இலாவகமாகப் படைத்தளிக்கிறார்.

இத்தொகுதிக் கவிதைகளில் கண்ணீரின் பாடல்,வேர்,துணை,துயரஅனல்,ஓமமும் வேள்வியும்,அபிமானவீரன்,வெளிப்பு,மனக்காயம்,பாட்டனும் பேரனும்,வெளிநாட்டுப் பறவைகள்,நீ இட்டசாபம்,ஓர் அறிவுநட்பு,ஆறுதல்,நின்னைப் புரிதல்,மேலாண்மை,மனஅவதாரம்,வாழ்க்கைப் புதிர்,பாசக்கயிறு,நிஜம், குரு முதலானகவிதைகள் சிறந்துவிளங்குகின்றன. இக் கவிதைகளில் அனுபவவெளிப்பாடுகளுடன் இணைந்துதனிமனிதஉணர்வுகள் முதன்மைபெறுகின்றன. இவற்றுள் பாட்டனும் பேரனும்,நிஜம் முதலானவைஅநுபவச் செழுமையைஅருமையாகப் புலப்படுத்துகின்றன. இத் தொகுதியிலுள்ளவேறுசிலகவிதைகள் ஜெயசீலனைச் சரிவரக் காட்டவில்லை. சாதாரணமாகஅமைந்துவிட்டன.

ஈழத்தில் சிலகவிஞர்கள் விமர்சகர்களின் பாராட்டைப் பெறவேண்டும் என்றநோக்கில்,அவர்களுக்கு இப்படிப்பட்டகவிதைகள் தான் பிடிக்கும் எனத் தப்பாகக் கற்பனைசெய்து,செயற்கையாகக் கவிதைகள் பண்ணுவதுஉண்டு. அவர்களதுஉணர்வுகளுக்கும்,அவர்களதுகவிதைகளுக்கும் எத்தகையதொடர்புகளும் இருப்பதில்லை. ஜெயசீலனின் கவிதைகளில் அத்தகையசெயற்கைப் பின்னல்கள் இடம் பெறுவதில்லை. அதனால்,அவரால் சுயமாகப் பிரகாசிக்கமுடிகிறது. ஈழத்துக் கவிதைக்குத் தேவையானதும்அதுதான்.

எழுத்தாளர்கள்,கவிஞர்கள் எழுத்துப் பிழையின்றிஎழுதுவதுமுக்கியமானது. ஜெயசீலனின் கவிதைகளிலும் ஆங்காங்குஎழுத்துப் பிழைகள் சில இடம்பெற்றிருக்கின்றன. உதாரணமாககைகோர்ப்பு,தன்னிஷ்டம்போன்றவற்றைக் குறிப்பிடலாம். கைகோப்பு,தன்னிஷ்டம் என்றுதான் அச்சொற்கள் வரவேண்டும்.வளர்ந்துவரும் கவிஞர் இச்சிறுகுறைகளைத் தவிர்த்துக் கொள்வதேநல்லது.

எதிர்காலஈழத்துத் தமிழ் இலக்கியவரலாறு ஜெயசீலனின் கவிதைகளையும் சேர்த்துப் பேசப் போகிறது. ஆனால் கவிஞர் தடம் புரளாமல் கவனமாகநடைபயிலவேண்டும்.

(இந் நூல் மதிப்புரை‘ஞானம்’சஞ்சிகையின் செப்டெம்பர் 2004 இதழில் வெளிவந்தது )

Leave a Reply