தங்க அம்மா

தாயாக வாழ்ந்த எழிற் கன்னி,ஈழச்
சைவத்தைவாழ்விக்கப் பிறந்தசெல்வி,
ஓயாதசொற்பொழிவால் உலகம் உய்ய
உயிர்த்தமிழின் மகிமைசொன்னதேவி,தெல்லித்
தாய் துர்க்கைக்கோவிலினைத் திருத்திப்…போற்றி
சமயநெறிப் புரட்சிசெய்தசக்தி,தெய்வச்
சாயலுடன் மறைந்தஅன்னாய்…நின்‘தொண்ணூறாம்-
ஜனனதினம்’…மனங்கசிந்துநினைவு கூர்ந்தோம்!

யுத்தத்தின் தீ…கொழுந்துவிட்டகாலை
ஊர்கள்பலகருகி…இடர் சுமந்தவேளை
எத்தனையோசேய்களினைத் தத்தெடுத்து,
இந்துவாகவளரவைத்து,வாழவைத்து,
சத்தியத்தின் நிழலாகநின்று,துர்க்கைச்
சந்நிதானத் தலைவியாகவென்று,பெண்மை
அற்புதமாய்,வழிகாட்டிநிமிர்ந்தஅன்னை!
அழகுசைவத் தமிழ்காத்த‘புதியஒளவை’!

“தங்கமம்மாநீ”என்றுபிறந்தபோது
‘தங்கம்மா’எனஅழைத்தார்! வளர்ந்தபின் நீ
‘தங்கமென’எமக்கிருந்தாய்! “நீதான் எங்கள்
தங்கஅம்மா”என்றார் தாய்அறியாச் சேய்கள்!
தங்கமுன்முன் குப்பையாகச் சேர…ஊரே
தங்கமாய்…நீதொட்டதெல்லாம் தங்கம் ஆச்சு!
“தங்கம்மாநிரந்தரமாய்இங்கே”கேட்டோம்!
தங்கிவிட்டாய் துர்க்கையடி…போற்றுகின்றோம்!

Leave a Reply