அமரர் கு.விசாகன்

அமரர் குமாரசுவாமிவிசாகன் நினைவாக….

மனங்களில் என்றும் வாழ்வாய்!

புன்னகைபூத்தகோலம்,
பொறுமைசேர் தெளிவுப் பேச்சு,
அன்புரு,அகமோவெள்ளை,
ஆன்மிகம் தமிழினோடு
மண்…இசை,கலைகள் மீது
மாறாதகாதல்கொண்டு
நின்றவாவிசாகா…!இன்றேன்
நிழற்படம் ஆனாய் ஐயா?

தாயவள்தவிக்கத்,தந்தை
தடுமாறித் துயர்தீவீழ,
தாரமோதுடிக்க,பிஞ்சுத்
தவமகள் உனைஎழுப்ப,
சோதரன் இடிய, சூழந்த
சுற்றத்தார் அதிர்ந்துசோர,
ஊரவர் நொருங்க,நாமும்
உடைய,ஏன் பிரிந்துசென்றாய்?

காரையூர் கவி,  கணக் காளர்
கனிந்துதிருவாசகத்தை
நாளும் முற்றோதிநின்று
நல்வழிசெல்லும் அன்பர்,
ஆம் ‘சடையாளி’பெற்ற
ஆற…மகர்குமாரசுவாமி
ஈன்றின்றும் பெருமைகொள்ளும்
ஏந்தலே…எங்கேபோனாய்?

வாழ்கின்றவயது,செல்வம்
மனைமக்கள் இன்பம் துய்த்து
ஆழ்கிறபொழுது,நாட்டின்
அவலத்தை இணையத் தூடாய்க்
காட்டியதுணிவு,தேசம்
கடந்துமேஉழைத்தவாழ்வு,
யாவுமேபோச்சோ? மாசம்
ஆனதோ?எவ்வாறுஏற்போம்?

ஊர்மீண்டு,உறவைச் சேர்ந்து,
உற்சாகம் பூண்டு,காரை
ஈழத்துச் சிதம்பரேசர்
எழில்விழாகண்டு,அந்த
நாள் இறைபணிகள் செய்தாய்!
திடீரென்றுநேற்றுமேனி
வாடிநீவீழ்ந்தாய்…எங்கள்
மனங்களில் என்றும் வாழ்வாய்!