வாழும் வியப்பு சோ.பா

மந்திரத் தமிழ்ச் சொல்லுள் உறைகிற
மாயஓசையைமர்மமாய்க் கோர்த்தொரு
சந்தச் சிந்துசமைக்கும் வரம்பெற்றிச்
சந்ததிக்கும் கவிதைச் சுவைகளைத்
தந்துவென்றிடும் சோ.பா! இளைஞனாய்
தனது‘பவழவிழா’வில் ஜொலிக்கிறார்!
‘செந்தமிழ்ச் செல்வர்’…ஈழக் கவிதைக்குச்
‘சிறியதந்தையர்’….வாழ்கநம் ‘நாவலர்’!

ஆங்கிலத்திலேஆழம்…,தமிழினை
ஆழ்ந்துஅகன்றுஅணுகிடும் கம்பீரம்…,
ஓங்குசைவஉயிர்ப்பின் பரிச்சயம்…,
உலக இலக்கியம் கற்றதனித்துவம்…,
ஈங்குமுத்தமிழோடும் அறிமுகம்…,
எல்லையற்றதத்துவத்திலும் வித்துவம்…,
தேங்கிடாது…நவீனத் தமிழையும்
தேடும் அதிசயம்… ‘சோ.பா’வின் அற்புதம்.

கவியரங்கினில் தோன்றியதேக்கத்தைக்
கடக்கப் பாலமாய் இன்றுமிங் குள்ளவர்.
கவிதைசொல்லலில் அனாயாசமாகவே
கலக்கி…ஆற்றோட்டத் தமிழைப் பொழிபவர்.
கவிதைகாதூடு இதயம் தொடுவதைக்
கருதிக்… ‘காவடிச் சிந்துகள்’தந்தவர்.
கவிதைஎங்கெங்குபுதுமையாய் மின்னுதோ…
கண்டு…மொழிபெயர்த் தெமைமகிழ்விப்பவர்.

‘வடக்கிருத்தல்’,‘நினைவுச் சுவடுகள்’,
‘சுவட்டெச்சம்’,மொழிபெயர்ப்புக் கவிதைகள்,
கிடைக்கும் ‘பர்மியப் பிக்குசொன்னகதை’,
கீர்த்தனம், இசைப்பா,அரங்கக் கவி,
தொடர்ந்துசெய்யும் சமூகக் கலைப்பணி,
சோர்ந்திடாதகற்பித்தல்,தலைமுறை
இடைவெளிபாராநட்பு, இவை ‘சோ.பா’
எனும் கவிஞனின் வாழும் வியப்புகள்!

Leave a Reply