எழுதாத ஒரு கவிதை – வெள்ளைக்கிருஷ்ணன்

த.ஜெயசீலன் யாழ்ப்பாணத்தின்முன்னணிக் கவிஞர்களில் ஒருவர்.1990 களில் கம்பன் விழாக்களில் இளங்கவியாகஅரங்கேறிய ஜெயசீலன் அந்தநாட்களிலேயே தன்னுடையக விதைகளாலும் கவிதைவாசிப்பினாலும் எல்லோரையும் வியப்பிலாழ்த்தினார். அப்போதுகம்பன் கவியரங்குகளில் இரண்டு ஜெயசீலன்கள் கவிதைவாசித்தனர். ஒருவர் த.ஜெயசீலன் மற்றவர் ஜெ.கி.ஜெயசீலன்,த.ஜெயசீலனைவிடச் சற்று மூத்தவர். ஆனாலும் த.ஜெயசீலன் தன்னைவிட மூத்தபுகழ்பெற்றகவிஞர்களுடன் சரிசமமாகநின்று அரங்குகளில் கவிதைச் சமராடினார். ச.வே.பஞ்சாட்சரம்,சோ.பத்மநாதன், இ.முருகையன்,கவ்வயல் வே.குமாரசாமி, நாக.சிவசிதம்பரம்,சு.வில்வரெத்தினம் என்று புகழ் பெற்றக விஞர்களின் மத்தியில் இளங்கவியாகப் புகுந்துவளர்ந்தார். த.ஜெயசீலனுக்கான ஊக்கத்தையும் தாகத்தையும் தந்தது கம்பன் கழகமே.

கம்பன் கழககவியரங்கத்தைஒருதளமாகப் பயன்படுத்திக் கொண்டுமேலெழுந்தத.ஜெயசீலன்,இதழ்களிலும் எழுதத் தொடங்கினார். பல்கலைக்கழக மாணவனாகப் படித்துக் கொண்டிருந்தவேளையிலேயே, ஜெயசீலனின் முதலாவது கவிதைநூல் ‘கனவுகளின் எல்லை’வெளிவந்தது. அந்தமுதல் தொகுதி பரவலான கவனத்தையும் பெற்றது.

ஜெயசீலனின் கவிதைகள் மரபுவழிப்பட்டவை என்ற போதும் அவர் வழமையானகவிஞர்களைப் போலன்றி சற்று வேறுபட்டதொனியில் வடிவ அமைப்பில் எழுதினார். இத்தகைய உத்தியை முன்னர் மகாகவி, இ.முருகையன்,எம்.ஏ.நுஃமான்,கல்வயல் வே.குமாரசாமிபோன்றவர்கள் கையாண்டனர். பின்னர் புதுவை இரத்தினதுரை இதை இன்னொருவகையில் கையாண்டார். ஜெயசீலன் இவை எல்லாவற்றையும் உள்வாங்கிக் கொண்டு,புதியகவிதைகளை எழுதினார். புதியமுறையில் எழுதினார்.அப்படி எழுதப்பட்ட கவிதைகளின் புதியதொகுதி’எழுதாதஒருகவிதை’என்றபெயரில் வந்துள்ளது.

நல்லூர் அருணன்பதிப்பகம் வெளியிட்டிருக்கும் இந்தத் தொகுதியில் வாழ்வுடன் இணைந்த கலந்த அத்தனைவிடயங்களையும் நாம் காணலாம். எத்தனையோகவிதைகளை எழுதியிருந்தாலும் ‘எழுதாதஒருகவிதையே’முக்கியமானமுதன்மையான கவிதையாக ஒரு கவிஞனின் மனதில் இருக்கும் என்பதை இந்தத் தொகுதியின் தலைப்புக் கவிதைஅழகாகச் சொல்லுகிறது. இன்னும் களைகளைக் களைவதன் மூலமேபயிரைப் பாதுகாக்கலாம்,பயன்பெறலாம்,என்பதை’களைகளை’என்றகவிதைமிகச் சிறப்பாக கூறுகிறது.

‘காதல் மழைநனைவீர்’என்றகவிதையில் ஜெயசீலன் கூற முனைகின்றபொருள் முக்கியமானது. சுயநலவட்டத்துள்,குறுகியமனஎல்லைக்குள் கட்டுப்பட்டுச் சுழலாமல், பரந்த உலகத்தில், சமூகநேயத்துடன், மானுடநேசிப்புடன் உருவாகுவீர், சமூகம் மீதுகாதல் கொள்வீர், அந்தமழையில் நனைவீர் என்று எல்லைவிரிக்கிறார். இதுதான் ஒருகவிஞனின் அழகும் சிறப்பும் எல்லை கடந்து பரந்ததளத்தில் விரிதல்.

‘மழைச்சாட்சி’என்றகவிதைபாரதியின் தீ,காற்றுபோன்ற கவிதைகளை நினைவூட்டும் இயல்புடனுள்ளது. இவை மட்டுமன்றி சக மனிதர்களைப் பற்றிய கரிசனையோடு எழுதப்பட்ட பல கவிதைகளும் இந்த நூலில் உண்டு.’முதுமையின் வலி’ இவற்றில் ஒன்று. ஒருமுதியவரின் முதுமை நிலையை எடுத்துரைக்கிறது.

இப்படிபலதளங்களில் தன்னுடையகவிதைப் பார்வையைவிரித்திருக்கும்த.ஜெயசீலன் மக்களுக்குச் சேவையாற்றும் ஓர் உயர் அதிகாரியாக பிரதேச செயலராகஉள்ளார். இது ஜெயசீலனின் சமூகக் கரிசனையைமேலும் தூண்டுகின்றது என நினைக்கிறேன். ஜெயசீலனின் இந்தக் கரிசனைகவிதைகளை, இலக்கியத்தைமேலும் செழுமையாக்கிமானுடநேயப் பண்புடன் இயங்கவைக்கும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.

ஜெயசீலன் இதைச் சாத்தியமாக்குவார் அந்தநம்பிக்கையின் சாட்சியமே’எழுதாதஒருகவிதை’நிச்சயம் அவரால் எழுதப்படும். அதற்கானஅடையாளங்களைநீங்கள் இதில் காணலாம்.

(இவ் நூல் பற்றியகுறிப்பு 15.06.2014 ம் திகதிய’தினமுரசு’நாளிதழில் வெளிவந்தது.)

Leave a Reply