நாகர் கோவில் பூர்வீகநாகதம்பிரான் புகழ்மாலை புனைந்த திரு.குடாநீரூரன்

நாகர் கோவிற் பதியதன் பூர்விக
நாகதம் பிரானின் புகழ் மாலையை
பாடினார் குடாநீரூரான்…யான் அதைப்
பார்த்துப் பரவசித் துணர்ந்துமேவாழ்த்தினேன்!
நாகர் கோவிலின் மூர்த்தியும் கீர்த்தியும்
நடந்தநிகழ்வுசரித்திரம்,அற்புதம்
யாவையும்.. எழில் யாப்பினில் யாவரும்
இரசித்து இன்புறயாத்துளார் வாழ்கவே!

மேளம் கொட்டுதல் போன்றநற் சந்தத்தில்
‘வெண்பா’…‘ஆறு’மற்றும் ‘பதினாறு’
சீர் விருத்தத்தில் பாடியபாத்தொடை
சிறந்தசொல்,பொருள்,மின்னப் பொலிந்தது!
ஓசைக்கட்டுள் மடக்கி.. இவ்வாலய
உண்மைவரலாற்றைசுவைபடச் சொல்லவும்
ஆககா கவிநயப்பயறிறைந்துள
அரியபாப் பொங்கல் புவிக்குக் கிடைத்தது!

கோவிற் சூழலைப் பாடியபாக்களில்
கொட்டுதேசுவை! கம்பனின் வர்ணனை
போலிருக்கவை! தொடர்பவை…ஆலயப்
புதுமை,வழமை,மகிமையைக் கூறுது!
யாவர் காத்துவளர்த்தவர்? அந்நியர்
யாரெவர் வந்துபணிந்தனர்? பாம்பினால்
தீண்டப்படுபவர் மீளும் கதை,எல்லாஞ்
செப்பும் சிந்து…நம் நெஞ்சைபிணிக்குது!

‘காவல் தெய்வங்கள்’பனுவல் பலன்…தனைக்
காட்டும் கவிதைகள் நுட்பம் பொதிந்தவை!
ஆலயக்கதைதேர்ந்தோர்க்கிப் பாமுற்றும்
ஆன்மஅனுபவம் மென்மேலும் சேர்ப்பவை!
நாகர் தான் ‘நம் ஆதி இறை’என்று
நவின்றுதமிழர் வணங்கக் கவிசெய்தார்!
வாழ்க இப்புகழ் மாலை… இறையருள்
வாழ்த்தும் நிஜம் ‘இது’வாழும் நிரந்தரம்!

Leave a Reply