Archive for the ‘கவிதைகள்’ Category

தெய்வ நீழல்!

கானக் கருங்குயில் பாடும் -அதைக்
காற்றும் இரசித்துச் சுதிசேர்ந்து ஆடும்.
வானப் புருவத்தில் பூசும் -மஞ்சள்
வண்ணம் கதிரின் கரத்தில் ஒளிரும்.
மோனப் பெருவெளி எங்கும் -முகில்
முக்தியின் தத்துவம் கேட்டு மகிழும்
நானத் தனிமையின் வாசம் -நண்ணி
நாலு திசையையும் போற்றி நடப்பேன்!

பட்சியின் வாழ்த்தொலிப் பாடல் -விண்ணில்
பட்டுத் தெறித்துத் திசைகள் சிலிர்க்க
விட்டு விடுதலை யாகி -தென்றல்
மேன்மை கொள் வாசம் திசைதிக்கிற் தூவ
சிட்டு, சிறு பறவைக்கும் -நிழல்
சிந்தும் மரங்கள் நிலத்தைக் குளிர்த்த
கட்டணம் அற்றிக் கருணை -தனை
கண்டு உணர்ந்து இரசித்து நகர்வேன்!

பச்சை வயற்கரை ஓரம் -ஓடை
பாயும்…சிறு மீன்கள் குதுகலித் தோடும்.
மச்சம் விளையும் கடலின் -அலை
வந்து கரைக்குக் கொலுசுகள் பூட்டும்
உச்ச வரம் தரும் காடு -எங்கள்
ஊர்களுக்கு உயிர் ஊட்டிடும் ஆறு
நிச்சயம் சொர்க்கமாம் தேறு -தெய்வ
நீழல்… இதில் நாமும் வாழ்வதே பேறு!

என்ன அழகெங்கள் பூமி -அட
இந்த இயற்கைக்கு எது ஈடு காமி?
பொன்னும் மணிகளும் தந்து -எம்
புழுவுக்கும் புற்கும் புரந்திடும் மாமி
என்னும்…நிலந்தனைக் காத்து -எழில்
என்றும் குலுங்க அருளணும் சாமி!
இந்த எழில் நறை மாந்தி -நாமும்
இறவாச் சுகம் பெறவே வழி காண்…நீ!

மாமழையான்!

போயகன்றது வான்மழை -இருட்
பூச்சழிந்தது விண்ணிலே -வெயில்
காய வைத்தது திக்கினை -சுடர்
கைதொடக் குளிர் போனது -நிலம்
வாயை வைத்து உறுஞ்சிடும் -விதம்
மண்ணின் வெள்ளம் வடிந்தது -அட
ஓய்ந்ததோ மழை…ஈரமும் -அதன்
ஓசையும் எனைத் தோய்த்தது!

எங்கிருந்து தான் வந்ததோ -இருள்
எங்கிருந்து கவிந்ததோ? -புதுத்
தங்கம் பூசியதாம் முகில் -வெறும்
தாரைப் பூசிய தானது -திடீர்ச்
சங்க நாதம் முழங்கலாய் -இடி
சாய்த்தது துணிவென்பதை -ஒளி
பொங்க மின்னல் கிழித்தது -மழை
பொத்துக் கொண்டு பொழிந்தது!

எப்பத்தான் எங்கு எப்படி -வரும்
இந்த மாமழை என்பதை -மனம்
செப்புமோ உய்த்து? இல்லையாம் -அதை
செய்யும் வருணனும் எங்குளான்? -எவர்
தப்பு, நன்மையிற் காய் இவன் -மழை
தந்தும் மறைத்தும் கடன் செயும் -பணி
எப்பவும் புரிகின்றனன் -அவன்
எண்ணம் அறிதல்… அவசியம்!

தேடி….வெடித்த திசைகளில் -மழை
சிந்தா தவற்றை ஒதுக்குவான் -வெள்ளம்
மூடிக் கிடக்கும் குடிக்கு மேல் -தினம்
மூன்று முறையும் பொழிகுவான்! -பயிர்
வாடி அழைக்க மறுத்துமே -கடல்
மட்டத்துக்கு உப்பு நீர் கூட்டுவான் -இன்று
நாடாத என்னை நனைக்கிறான் -தீமை,
நன்மைக்கா நானும் அறிகிலேன்!

அறங்(ம்)காவல் செய்த தேவர்!

முன்னூறு வருடம் நல்லூர்
முருகர்க்குச் சேவை ஆற்றி
அன்னவன் பெருமை காக்கும்
அரும்பணி செய்…மாப்பாணர்
சந்ததி தனிலே…பத்தாம்
தலைமை நிர்வாகி யாகி Read the rest of this entry »

தேவிஅருள் தேடித் தெளி!

கலைதூண்டும் சக்தி… கரையில்லாக் கல்வி
நிலைத்துயிர்க்க வைக்கும் நிபுணி -உலகவாழ்வின்
அர்த்தம் உணர்த்துகிற அன்னை…சரஸ்வதியை
வர்ணங்கள் பாடி வணங்கு. Read the rest of this entry »

ஞானவீரர்

நல்லூரைப் புதுமைகளுள் நகர்த்திக் காத்த
நாயகர் நம் ‘குமாரதாஸ் மாப்பாணர்’ தான்!
எல்லைகளை விரித்து, மூலஸ்தானம் விட்டு
இருந்த முழுக் கோவிலையும் புதிதாய்ச் செய்து,
பல் பழைய நடைமுறைகள் தவிர்த்து, எந்தப்
பக்தர்களும் பேதமற்று வணங்க வைத்து, Read the rest of this entry »

நல்லூரடி மாலை

மந்தை வரிசையாய் வானில் முகிற்கூட்டம்.
சந்தனத்தை அனைத்தினிலும்
சாத்திற்று பொன்அந்தி.
வடக்கிருந்து தெற்காக
நகருதந்ந முகில் மந்தை.
இடைக்கிடை சிலுசிலுத்து Read the rest of this entry »

ஜெயிப்பமா?

ஈரமான இதயம் படைத்தவர்
எங்கு எங்கென நாற்திசை தேடினேன்!
பாரம் துன்பம் பகிர்ந்து சுமந்திடும்
பண்புளோர்களின் பாதமும் நாடினேன்!
கோரம் கொடுமை கண்டு குளிர்ந்திடும்
கொள்கையர்களே கூட்டணி சேர்ந்தனர். Read the rest of this entry »

மனித மனம்

சிங்கத்தி னுள்ளே சிங்கமனம் இருக்கிறது!
பொங்கும் புலிக்குள்
புலிமனம் இருக்கிறது!
நாகத்துள் நாகமனம்,
நரிக்குள்ளே நரியின் மனம்,
காகத்துள் காகமனம், Read the rest of this entry »

உறவு

உன்னுடைய கண்ணீரைத் துடைத்துவிட
என்விரலும்
என்னுடைய கண்ணீரைத் துடைத்துவிட
உன்விரலும்
உன்னுடைய கண்ணீரை
நிறுத்துதற்கு என்மனமும் Read the rest of this entry »

பார்த்துக்கொள்!

பொருள்பெரிதாய்த் தேவையில்லை புண்ணியனே..
நின் நீங்கா
அருளைத்தான் வேண்டி அழுதோம்
நல்லூரவனே!
வந்து தொடு;
எங்கள் மனவருத்தம் தீர்; தீர்த்தம் Read the rest of this entry »

சூர சங்காரம்

தங்கு தடையின்றித் தருமத்தைச்
சாய்த்தவரைச்
சங்காரம் செய்வதற்கு
சண்முகன் அவதரித்தான்!
ஆணவம் கன்மமொடு மாயை
அவுணர்களில் Read the rest of this entry »

நன்றருள்வான் என்றும்.

துன்பத்தில் தேவர்கள் துவண்டு
பரம்பொருளை
அன்றழுது நேர அரனும்
நுதல்விழி
திறந்தான்…பொறி ஆறு
செந்தாமரை சேர்ந்து Read the rest of this entry »

சொல் வழி

புதியதானதோர் எண்ணம் பிறந்திட
புத்துயிர்த்து நும் சிந்தனை தன்னிலோர்
விதி எழுதிட வேணும் என் தோழனே!
விதை இடு சிந்தை தன்னை நீ சாறியே!
நதியைப் போல நகரும் எம் வாழ்விலே
நாகரீக நடப்பினுக் கேற்றதாய், Read the rest of this entry »

பெளர்ணமிப்பா!

உடலின் அசதிக்கும்;
உயிர் மனது பகல் முழுதும்
அடைந்த வலிகாயம் அத்தனைக்கும்;
ஒத்தடங்கள்
கொடுத்துக்கொண் டிருக்கிறது
தன்(ண்) ஒளியால் குளிர்நிலவு! Read the rest of this entry »

குணம்

வானிலே சிட்டாய் மகிழ்ந்தேறிப் போம்;
நூறு
கானம் இசைத்துக் கவிக்குயிலாய்ச் சுற்றிவரும்.
மீனாக ஆழ்கடலில் விளையாடும்.
வளை நண்டாய்
ஓடி உயிர்ப்பயத்தில் Read the rest of this entry »

கவியரங்கக் கவிதைகள்
பெரியோர்கள் போற்றுதும்..
எனது புதிய பதிவுகள்
ஒலிப் “பதிவு”
ஒளிப்பதிவுவெளியீடுகள்

முகப்புத்தகத்தில் தொடர
வருகைதந்தோர்
  • 117567Total reads:
  • 86226Total visitors:
  • 0Visitors currently online:
?>