கவலை

உதிர்ந்த இலைகள், பூ, கிளைகள், வேர்கள் பற்றிக்
கவலைப் படுவதில்லை காண்…
மரங்கள்; கலைந்த
முகில்களை எண்ணி முறைப்பதில்லை வான்; நிலத்தில்
விழும்துளிகள் பற்றி வினவாது மேகம்; வீழ்ந்து
சிதைந்த அலைகள்பற்றிச்
சிந்திப்ப தில்லைகடல்;
அணைந்த சுவாலைபற்றி
அலட்டிடாது மூழுந்தணல்;
காற்றில் கரந்தமண் துகள்களினை எண்ணிச்
சோராது பூமி;
தொலைந்த கதிர்களினைத்
தேடாது சூரியன்;
இவைபோல்…தினந்தினமும்
இறந்துமே தோற்று இழிந்த
மனிதர்பற்றி
கவலைப் படாதுவையம்!
கணக்கில் எடாதியற்கை!!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.