இளைய படைப்பாளியான தமிழ்மொழி அவர்களின் ‘புன்னகைத்தீந்த இருப்பு’ என்ற தொடர்கதை பூபாலன் வெளியீடாக வெளிவந்து இருக்கிறது. 90 பக்கங்களையும் 7அத்தியாயங்களையும் கொண்டு ‘புன்னகைத்தீந்த இருப்பு’ என்ற தொடர்கதை வெளிவந்து இருக்கிறது. ஈழத்தினுடைய பெண் படைப்பாளி வரிசையில் பல்வேறு இலக்கிய வடிவங்களில் ஆளுமை செலுத்தி இருக்கிறார்கள். நாவல்,சிறுகதை,கவிதை போன்ற துறைகளில் ஈழத்து பெண்கள் நீண்ட காலமாக இந்த துறைகளில் பங்களிப்பு செய்து வருகிறார்கள். யுத்த காலத்திலும் யுத்தத்திற்கு பின்னரும் தற்போதைய காலத்திலும் இந்த படைப்பாளிகள் படைப்புக்களை படைத்து வருகின்றமை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. யுத்த காலத்தில் நேரடியாக தொடர்புபட்ட போராளி படைப்பாளிகள் நாவல்கள்,சிறுகதைகள் என்பவற்றை எழுதினார்கள். அவை அந்த காலத்தின் கோலங்களை படம் பிடித்து காட்டுபவையாக அமைந்திருக்கின்றன. யுத்தம் நிறைவடைந்த பின்பு யுத்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புபக்கள்,கொடூரம், அவர்கள் பட்ட துன்பங்கள் வாழ்வாதாரத்தை நிமித்துவதற்காக அவர்கள் பட்டபாடுகள் சமூகத்தில் அவர்களுக்கு கிடைத்த இடம் பெற்ற வகிபாகம் என்பன பல்வேறு படைப்புக்களாக வெளிவந்திருக்கின்றன.
இதில் யுத்தத்தோடு தொடர்புபட்ட ஒரு தரப்புக்கு ஆரதவாளர்கள் அவற்றை விமர்சித்தவர்கள் என பல்வேறுபட்டவர்கள் தமது படைப்புக்களை வெளியிட்டு இருக்கிறார்கள். வெறும் விமர்சன நோக்கோடு மட்டுமன்றி யுத்தத்தில் பங்குபற்றியவர்களுடைய கஸ்டங்கள் அவர்கள் ஏன் தோற்றார்கள் என்பவற்றிற்கான காரணங்களை பேசுகின்ற படைப்புக்கள் வெளிவந்திருக்கின்றன.இந்த யுத்தத்திற்கு பின் பெண் படைப்பாளிகள் பலர் வெளிவந்திருக்கின்றார்கள்.அவர்கள் யுத்தத்தோடு தொடர்புபட்டு யுத்தத்தில் இருந்து வெளியேறி புனர்வாழ்வு பெற்று சமூகத்தோடு இணைந்திருக்கின்ற பெண் படைப்பாளிகளும் பலர் இருக்கிறார்கள்.இப்படிப்பட்ட படைப்பாளிகள் தங்களுடைய கடந்த கால அனுபவங்களை ஒரு வெற்றிடம் தொடர்பான அவலங்களை தங்களுடைய படைப்புக்களில் உள்வாங்கி வந்து இருக்கிறார்கள்.இங்கே ‘தமிழ்மொழி’ அவர்கள் ஒரு தொடர் கதையை எழுதி இருக்கிறார்.இவர் ஏற்கனவே இரண்டு நூல்களை வெளியிட்டு இருப்பவர்.இந்த தொடர் கதை என்ற வடிவம் ஈழத்து படைப்பு இலக்கியத்திலேயே குறைவாகத்தான் இருக்கின்றது.நாவல்கள் இருக்கின்றன சிறுகதைகள் இருக்கின்றன ஆனால் தொடர்கதை என்று ஒரு காலத்திலேயே வார இதழ்களில் வாராவாரம் ஒரு ஈடுபாட்டையம் எதிர்பார்ப்பையும் அதிகரித்து தொலைக்காட்சி நாடகங்களில் இருக்கின்றதை போன்று ஒரு வடிவமாக இந்த நூல் ஆசிரியரது ‘புன்னகைதீந்த இருப்பு’என்ற தொடர்கதை வெளிவந்திருக்கிறது.இந்த நூலினுடைய தலைப்பே இன்றைய வாழ்கையில் ஒரு இருப்பு இருக்கின்றது அந்த இருப்பினுடைய புன்னகை தீந்துவிட்டது அல்லது கருகிவிட்டது என்ற கருத்தை அதன் யதார்த்தத்தை அது படம் பிடித்து காட்டுவதாக அமைகின்றது.
எனவே ஒரு தொடர்கதை ஒரு இடத்தில் தொடங்கி அங்கு இருக்கின்ற அல்லது நடக்கின்ற சம்பவங்களை கதாபாத்திரங்களின் குணவியல்கள் அவர்களின் சம்பாசனைகள் ஊடாக நகர்கின்ற அதேவேளை கடந்தகாலங்களிலேயே ஏற்பட்ட குறிப்பாக யுத்தகாலத்திலேற்புட்ட பல சம்பவங்களை கோர்வையாக சொல்லிவருகின்றது இறுதியில் முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் ஏற்பட்ட இடர்கள் போன்றவற்றையும் ஒரு காலகட்டத்தில் யுத்தகளங்களில் நடந்த நிகழ்வுகள் சம்பவங்களையும் இதில் சம்மந்தப்பட்ட மாந்தர்கள் உறவுகள் அவர்கள் இன்று எப்படியான நிலையில் இருக்கிறார்கள் என்பதை பேசுகின்றது.எனவே இந்த ‘புன்னகைதீந்த இருப்பு’ யுத்தத்திற்கு பின்னரான வெளிவந்திருக்கினற படைப்புக்களில் ஒரு முக்கியமான படைப்பாகத்தான் பார்க்கின்றோம்.யுத்தத்தின் பின் பெண் படைப்பாளிகளில் தொடர்கதையை பின்பற்றியவர்கள் குறைவு அதிலேயே தமிழ்மொழி அவர்கள் அந்த வடிவத்தை கையிலேயே எடுத்து நூலை வெளியிட்டு இருக்கிறார்.எனவே அவருக்கு பாராட்டுக்களை தெரிவிப்பதோடு ஒரு சிறுகதைக்கும் நாவலுக்கும் இடையிலான வேறுபாடு என்ன என்பது பற்றி எல்லாம் பல கருத்துக்கள் இருக்கின்றன. எனவே அக்கருத்துக்களில் அதிலே இருக்கின்ற நுட்பங்ளை கற்றுத்தேர்ந்து இந் வடிவத்தை இவர் கையாண்டு இருக்கிறார் அதிலே சில பாராட்டப்படவேண்டிய குறித்துகுறித்து சொல்லப்பட வேண்டிய சில விடயங்கள் இருக்கின்றன அல்லது ஒரு சம்பவம் விவரிப்பு ஒரு விடயங்களை கோர்வியாக சொல்லுகின்ற ஒரு தன்மை போன்ற விடயங்களை சொல்லுவதில் தமிழ் மொழி அவர்கள் சிறப்பாக செயல்பட்டு இருக்கின்றார் ஆனால் ஒரு நவீன நாவல் சிறுகதை போன்றவற்றிலேயே இருக்கின்ற சில அபரவிதமான விடயங்கள் பற்றி அவர் அலட்டிக்கொண்டதாக இல்லை அதை பற்றி எல்லாம் அறிந்து இந்த படைப்புகளை வழிபடும் போது அது நிச்சயமாக ஒரு சிறுகதை அல்லது தொடர்கதை என்று தனிச்சிறப்பால் அமையும் அனுபவம் இருக்கின்றது யுத்த காலங்களில் ஏற்பட்ட சம்பவங்கள் அவர்
மனத்திரையிலேயே ஓடிக்கொண்டிருக்கின்றது எனவே அவற்றை உரிய பரிமாணத்தோடு அடைப்புகளிலேயே உருவாக்குனபோது நிச்சயமாக ஈழத்துப் படைப்பு ஆக்கத் துறையில் ஒரு காலகட்டத்தினுடைய சாட்சிகளாக குறிப்பாக யுத்த காலத்தினுடைய சாட்சிகளாக அந்த நினைவுகளை சுமந்து கொண்டு பல நெருக்கடிக்குள்ளேயே வாழ்ந்து அவர் வாழ்ந்து வருபவர்களுடைய உணர்வுகளின் பிரதிகளாக இந்த படைப்பு அமையும் எனவே தமிழ் மொழியினுடைய படைப்புகள் வாழ்த்து வாழ்த்து தெரிவித்துக் கொள்வதோடு எதிர்காலத்திலும் இதுபோன்ற படைப்புக்களை அவர் எங்களுடைய கடந்த கால நினைவுகளை எங்களை மீட்டெடுப்பதற்கு நாம் அந்த காலத்தில் அனுபவித்திறாத விடையங்களை நாங்கள் அறிந்து புரிந்து கொள்வதற்கும் வழி வகுக்க வேண்டும் என வாழ்த்தி அமைகிறேன். ¬¬
அன்புடன்
த.nஐயசீலன்