மணிரத்ன அரசியல்

மணிரத்னம் ஒரு தமிழனாக இருந்தாலும் தமிழின் தனித்துவம், அடையாளம், பண்பாடு, கலாசாரம், வாழ்க்கை முறைமைக்கு, எதிரான அரசியலின் விம்பமாக பிரதிநிதியாக தான் நீண்டகாலமாக இயங்கி வருகிறார் என்று நினைக்கிறேன், இதை தனது ஆரம்ப காலத்திலிருந்து இவர் நிரூபித்தும் வருகிறார்….’காற்று வெளியிடை’ வரை. அவர் இந்த அரசியலைப் பயன்படுத்துகிறாரா இல்லை அவரை அந்த அரசியல் பயன்படுத்துகிறதா என்பது தான் எனது கேள்வி. அவரின் திறமையில் எனக்கு ஐயமில்லை.ஆனால் அவரின் அரசியல்…ஐயுறவைக்கிறது.
அதி சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களுடன் இணைந்து அந்தந்த கால trend ஐ உள்வாங்கி நாசூக்காக தனது அரசியல் கருத்து, கொள்கைகளை தன படைப்புகளூடாக பரப்பி தனது அரசியல் செல்வாக்கினால் அதற்கு அங்கீகாரமும் விருதுகளையும் பெற்று கொள்கிறார் என்பது என் அபிப்பிராயம் .
அவரின் கதாநாயகர்கள் அநேகமானவர்கள் தமிழ் அடையாளம் அற்றவர்களாக இருப்பார்கள்.தமிழ் அடையாளத்தோடு காட்ட படுவோர் இயல்பில் வில்லத்தனமான மனோநிலையில் இருப்பவர்கள் போல காடையர்கள் போல காட்டப்படுவார்கள். வில்லன்கள் அநேகமாக வடக்கத்தேய தோற்றமுடையவர்களாக இருப்பார்கள். படங்களில் வடக்கின் அல்லது ஹிந்தியில் தாக்கம் அதிகமாக இருக்கும்.(மௌன ராகம், நாயகன் )
தமிழ் கலாசாரத்தியக்கு விரோதமான விடயங்கள் புகுத்தப்பட்டு அது சரிதான் என அங்கீகரிக்கப்பட்டு இருக்கும். உ-ம் இரண்டு பெண்டாட்டி (அக்கினி நட்சத்திரம்) ,கிழவிகள் நடனம், திருமணமாகாமல் கர்ப்பம் (தளபதி), எமது வழமைக்கு மாறான காதல், living together, கலியாணத்துக்கு முந்திய தாம்பத்யம் , இப்படி பல…மேலும் தமிழ் ,தமிழரின், தமிழகத்தின் அரசியலை எதோ விதத்தில் நையாண்டி செய்வதாக கொச்சை படுத்துவதாக அவரின் படைப்புகள் இருக்கும். உ-ம் ஈழப்போராட்டம் என்பது வெறும் ஆயுத உற் பத்தியாளர்களின் போட்டிக்காக நடத்தப்படுகிறது என்ற கண்டு பிடிப்பை அவர் ‘கன்னத்தில் முத்தமிட்டாலில்’ முன் வைத்திருப்பார்;.’இருவரிலும் ‘ இதனை அவதானிக்கலாம்
ஓரளவு தமிழ் கலாசார அடையாளங்களுடன் வந்த தனது ‘இதயக்கோவில்’ தான் தனது மட்டமான படைப்பு என ஒரு பேட்டியில் சொல்லி இருந்தார்.
மணியின் இந்த தமிழ் விரோத அரசியல் தான் அநேகமாக தமிழ் இசை அடையாளமான .இளைய ராஜாவை புறக்கணித்ததும், தொழில் நுட்ப ஆற்றல் மிகுந்திருந்த போதும் ராஜாவை விட ஒப்பீட்டளவில் இ சை அறிவு ஆளுமை குறைந்த ரகுமானை முன்னுக்கு கொண்டுவந்து (05.04.2017 ஆனந்தவிகடன் ‘அவரும் நானும்’ பேட்டியை பார்க்கவும்) முதற் படத்திலே தேசிய விருது கிடைக்க காரணமாக இருந்ததும் தொடர்ந்து அவருக்கு உலக அங்கீகாரம் கிடைக்க வைத்ததும் என ஐயுற வைக்கிறது. ஒருவேளை மணிரத்னத்திடம் அறிமுக மாகியிராவிட்டால் ரகுமான் இந்தளவு உயரத்தை தொட்டு இருப்பாரா என்பதும் கேள்விக்குறியானது.