குறளோடு என் குரல்

எமது நீண்ட தனிச்சிறப்பு அடையாளங்களை கொண்ட , பாரம்பரிய செழுமைமிக்க, எமது வாழ்க்கையை பிரதிபலித்த, தமிழின் இலக்கண இலக்கியங்களை இசைக்கூறுகளை கற்காது மறந்து அல்லது மறுதலித்துவிட்டு, எல்லாம் தெரிந்தோர் போல் கச்சை கட்டி கொண்டு, தாம் நவீனவாதிகள் என்று நின்று, ஏதோ சில ‘இசம்’ களை மேலோட்டமாய் தெரிந்துகொண்டு, தாம் கற்றது கையளவு என அறியாது,
“தாமே மேதாவிகள் விமர்சகர்கள் என்றும் தமிழ் அழிகிறது என்றும் மரபுரிமை தொலைகிறது தமிழடையாளம் காக்கப்பட வேண்டும்”” என்றும் ‘கூட’ குதிக்கும் ஆழ்ந்த அறிவில்லாதவர்களை உள்ளடக்கிய ‘சிற்றறிவாளர் -அல்லது – புல்லறிவாளர்கள்’ களை பற்றி 2000 ஆண்டுகளுக்கு முன்பே வள்ளுவனார் கூறியிருக்கிறார் ‘பொருட்பால்’, ‘அங்கவியல்’ ‘புல்லறிவாண்மை’ எனும் அதிகாரத்தில். அதில் மிகப் பொருத்தம் கருதி…..
1.’வெண்மை எனப்படுவது யாது எனில்?’ ‘உண்மை
உடையம் யாம்’ என்னும் செருக்கு. (குறள் 844)
கருத்துரை –சிற்றறிவு என்பது எதுஎன்றால் தம்மைத் தாமே ‘நல்லறிவுடையவர்’ என்று மதிக்கும் மயக்கமாகும் .
2.கல்லாத மேற்கொண்டு ஒழுகல் காடு அற
வல்ல தூம் ஐயம் தரும் (குறள் 845)
கருத்துரை –சிற்றறிவாளர் தாம் கல்லாத நூல்களை கற்றறிந்தது போல நடிப்பது, அவர் குற்றமல்லாமல் கற்ற நூல்களிலும் பிறருக்கு ஐயத்தை ஏற்படுத்தி விடும்.
3.ஏவவும் செய்கலான்; தான் தேறான்; அவ்வுயிர்
போ ஓம் அளவும் ஓர் நோய். (குறள் 846)
கருத்துரை –சிற்றறிவுடையவர் அறிவுடையார் சொல்வதை செய்யவும் மாட்டார். தாமாக இவை இவை செய்யக்கூடியவை என அறியவும் மாட்டார் . இவர்கள் உயிர் உடலை விட்டு பிரியும் வரை இந்த நிலத்துக்கு பொறுக்க முடியாத நோய் போல விளங்குவர்.
4.காணாதாற் காட்டுவான்; தான் காணான்; காணாதான்
கண்டானாம் தான் கண்டா வாறு (குறள் 849)
கருத்துரை –தான் கண்டறியாததை கண்டது போல பிறருக்கு காட்டுவான். சிற்றறிவாலும் கொண்டது விடாமையாலும் தான் அறிந்த அளவிலேயே அறிவுடையவனாக இருப்பான் .இவனுக்கு அறிவிக்க புகுவபன் அறியாதவனாகிடுவான்.
5.உலகத்தார் உண்டு என்பது இல் என்பான், வையத்து
அலகையா வைக்கப் படும் (குறள் 850)
கருத்துரை –உயர்ந்த அறிவுடையோர் பலரும் கண்டு தேர்ந்து உண்டு என்ற ஒரு பொருளை தன சிற்றறிவில் நிமித்தம் இல்லை என்று மறுதலிப்பவன் உலகத்தில் காணப்படும் பேய் என்று கருதப்படுவா