த.ஜெயசீலனின் கவித்துவமான தன்னுணர்ச்சிப் பாடல்கள் – கே.எஸ்.சிவகுமாரன்

அண்மைக் காலமாகக் கவிதை எழுதி வருபவர்களில் த.ஜெயசீலனும் ஒருவர். இவருடைய கவிதைத் தொகுப்பொன்று முன்னரே வெளிவந்தது என அறிகிறோம். இப்பொழுது 81 கவிதைகள் அடங்கிய தொகுப்பு “கைகளுக்குள் சிக்காத காற்று” வெளிவந்திருக்கிறது.

இவர் நல்லூரைச் சேர்ந்தவர் என்பதைவிட இவரைப் பற்றிய விபரங்கள் அதிகம் தெரியவரவில்லை.
இவரின் கூற்றுப் படியே, இவருடைய கவிதைகள் இயற்கை, இறைநினைவு, காலம், நம்பிக்கை ஆகிய பொருள்களை உள்ளடக்கியவை.

‘துணைதருக’ என்ற கவிதை இவ்வாறு முடிகிறது.
“உமைமீறி யாரும் அதர்மத்தின் நிழலாய்
அரக்கர்கள், அதர்மர், எம்அழகு ப+மி தனைஏய்க்க
எழுந்தருளின் அறம்பாடி அவரெரிய வைப்போம்
நீர் துணைதருவீர்”.

இந்தக் கவிதையில் லயம் இருக்கிறது. சொல்லும் பொருளும் அர்த்தமுடையதாக வடிவம் பெற்றுள்ளது.
அடுத்த கவிதை ‘ஆறும் நானும்’ வடபகுதியின் ‘சிவப்பு ஆறு’ பற்றிய பார்க்கொணாக் காட்சியை
சித்தரிக்கிறது. இதே போல ‘கொள்ளை போன குளம்’ தரும் காட்சி கவிஞருக்கு ‘மௌனமொரு பூத’ மாக காட்சிப் படிமத்தைக் கொண்டு வருகின்றது. ‘கண்ணீரின் பாடல்’ கவிதையில் அவர் விடுக்கும் வேண்டுகொள், இந்த வெள்ளப் பெருக்கில் அகப்பட்ட எல்லோரையும் மீட்டு மனிதராக மாற்ற வேண்டும்,“உயிர்ப்புகளை இழந்திழந்தே சடமாய்ப் போனோம்” என்று கவிஞர் புலம்புவது நிதர்சனச் சொல்.

ஆற்றொழுக்கு நடையில் கவிதை இயற்றும் இக்கவிஞர் கூறுவதும் நிiனைவூட்டத் தக்கது.
“ஐம்பத்தி எட்டில் கொதித்த தார்ப் பீப்பாவில்
சங்கமித்த தமிழ்மகனின் வலியினிலே
நானுமிங்கு
கொஞ்சம் அனுபவித்த கொடுப்பினையில் நடக்கின்றேன்.”
மற்றோரு ஆக்கம் ‘கண்டிவீதியில் கவிந்த கவிதை’ அதில் கவிஞர் கூற்றும் எண்ணிப் பார்க்க வைக்கிறது.
“சமாதான காலப் பயணச் சுகத்திடை இத்
தெருவின் விலைகொடுப்பு சொகுசான பயணத்தை
எனக்குத் தருவதில்லை…இன்றும் தரவுமில்லை.”
மற்றொரு கவிதையில் துயரத்தை அலையாக உருவகப்படுத்தும் கவிஞர்,“துயரத்தை எதிர்கொள், அது உன்னை வளர்க்கும்” என்று உரைக்கிறார். இவர் கொண்டுள்ள நம்பிக்கை, வரட்சி நிலையை மீறி மீள் உயிர் பெறலாம் என நம்மையும் உற்சாகப் படுத்துகிறது.

“பொல்லாத சூதகலும் தர்மம் சுடரும் கவிதைபோல்
வேதனையை வெல்வோம் விரைந்து” என்பது கவிஞரின் வாக்கு.

ஜெயசீலனின் கவிதையுணர்வை வெளிப்படுத்தும் முகமாக 37ம் பக்கத்தில் இவர் எழுதியிருக்கும் ‘எமது பாடல்கள்’ என்ற கவிதையை முழுமையாகப் படித்துப் பாருங்கள். விபரணப் பாங்கில் (யெசசயவiஎந) “வெளிப்பு’ என்ற கவிதையில் நடப்புச் சித்திரம் ஒன்றைக் கவிதைபோல் கவிஞர் சொல்வதும் இரசிக்கத் தக்கது. இதே மாதிரி,‘ஆறதல்’ என்ற கவிதையும் பரவசமூட்டுகிறது. ‘மனக்காயம் ‘ என்ற கவிதையும் மனத்தைக் குறுக்கிட வைக்கிறது. நல்ல ஒரு சிறுகதையைப் படித்தது போல ‘துயரின் கனம்’ என்ற கவிதை உணர்ச்சியைப் பரிவர்த்தனை செய்கிறது. ஜெயசீலன் இன்றைய புதிய கவிஞர்களில் திறனாற்றல் கொண்டவர் என்பது தெளிவாகிறது.

கவிஞர் எழுதிய நீண்ட கவிதையான ‘பாட்டனும் பேரனும்’ அற்புதமான உண்மை நேசத்தை பின்னோக்கிய உத்தியில் கூறுவது போல கட்டமைக்கப்பட்டுள்ளது. கவிஞரின் உளநெகிழ்வு கவிதைக்கு வளஞ் சேர்க்கிறது.
‘வெளிநாட்டப் பறவைகள்’ சொல்லும் சேதி வெளிப்படை. விபரிப்பு அழகு. ‘நீ இட்ட சாபம்’ கூட மெய்சிலிர்க்க வைக்கிறது. எனக்குப் பிடித்த மற்றுமொரு கவிதை ‘தனித்திருத்தல்’

ஜெயசீலன் அறிவும் உணர்வும் கூடிய ஓர் இளைஞன். தங்கு தடையின்றி ஓசை நயத்துடன், யாவரும் எளிதிற் புரிந்து கொள்ளக் கூடிய விதத்தில் இவர் கவிதையாக்கம் அமைவதால் இவர் பாராட்டக்குரியவராகிறார்.

இவரின் கவிதைகளை வாய்விட்டுப் படிக்கும் போது ஆற்றொழுக்கான லயமும், சந்தமும் கேட்பதற்கு இனிமையாக அமைகிறது. ஏகாந்தம், தனிமை, மௌனம், போன்ற நிலைகளில் கவிஞரின் சொற்றிறம் அக்குணவியல்புகளுக்கு அர்த்தம் கற்பிக்கிறது. ‘ஓர் அறிவு நட்பு’ இதற்கு உதாரணமெனக் கொள்ளலாம். வெறும் அரசியல் அல்லது வீறாப்பு சுலோகங்களை கவிதை என்று எழுதும் இளைஞர்கள் மத்தியில் கவிதை நயந்தரும் ஓசை ஒத்திசைவுகளை ஜெயசீலன் கையாள்கிறார்.
இந்த வரிகளைப் பாருங்கள் ‘தேவதைகள் பற்றிய பாடல்’ கவிதையில் வரும் ஒரு பகுதி

“இரு அழகுச் சிறகோடு
வண்ண முடிதரித்து வானில் வலம் வந்து
மின்னும் உடைபுனைந்து
வித அழகால் மயக்குபவை” என்ற மனப்பாடமும் என்னை கவர்கிறது.
‘சைழலெ’ என்ற முரண்நிகழ்வை ‘வாழ்க்கைப் போர்’ என்ற கவிதையூடு தமது அவதானிப்பை கவிஞர் இவ்வாறு முரண்நிகழ்வாகக் காட்டுகிறார்.
‘ஏழ்மை’ என்ற கவிதையிலே
“சுழலுகிற மின்விசிறி சுழன்று
சுழன்று…தான்
களைத்து வியர்க்கையிலே
காற்றுக்கு எங்குபோகும்?”

‘மேலாண்மை’ என்ற கவிதையிலே ளயவசைந உம்(அங்கதம்) நகையுணர்வும் ஏற்படுகிறது.
சில சுமாரான கவிதைகளையும் இந்த 110 பக்க நூல் அடக்குகிறது. நாடறிந்த சிறந்த ஓவியர்களில்
குறிப்பிடத் தக்கவரான ரமணி அட்டைச் சித்திரத்தை கற்பனையும் கவிதா இயக்கமும் கொண்டதாக தந்திருக்கிறார்.
நீண்ட நாட்களின் பின் தனிமனித (pநசளழநெட) தன்னுணர்ச்சிப் பாடல்கள் (டலசiஉள) கொண்ட ஒரு கவிதைத் தொகுதியைப் படித்து உவகை கொண்டேன்.

(இவ் இரசனைக் குறிப்பு 28.06.2008 திகதிய ‘வீரகேசரி’ பத்திரிகையில் பிரசுரிக்கப் பட்டது)

Leave a Reply