Author Archives: Webadmin

கஞ்சிக் காதை

தோட்டாவும் குண்டும் துளைக்கக் ‘கடைசியாக’ கேட்பார்கள் அற்றே இனம் கிழிந்த – நாட்களிலே கெஞ்சித் துவண்ட பசிவயிற்றைக் காத்தது..இக் ‘கஞ்சி’ அதைமறவா தே! ஊர்கள் ஒருகரையில் ஓய்ந்தொதுங்க, நாலுலட்சம் பேர்கள் உயிரைப் பிடித்தபடி – போர்க்களத்தில் நின்று நிலைகுலைய, நீறாகாமற் கஞ்சி ஒன்றே உயிர்காத்த தாம். கண்ணீரின் உப்பும், கடற்காற்றின் உப்பதுவும், சிந்திய இரத்தச் சிறு … Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on கஞ்சிக் காதை

வெல்வோம்

வாழ்வு வருமென்று வாசல் தனில் நாளும் வாடி, வழிபார்த்து உள்ளோம் -மன வாட்டம் தனில் மாரி ஊற்றும் அமுதென்று வானம் தனைப்பார்த்துக் கொள்வோம் -நிதம் சூழும் இடர் வீழும், சோதனைகள் தீரும் சொர்க்கம் வரும் நம்புகின்றோம்-தொடர் தோல்வி அழும்; காலம் தோளைத் தொடும்; மீண்டும் சூரரென நாளை வெல்வோம்! நேற்று நெடும் போரில் நீறி எழுந்தோமே … Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on வெல்வோம்

தேர்ப்பவனி

வாழ்வென்னும் தேரோ… மனமென்னும் சாமியுடன்… ஆசைகள் வடம்பிடித்து அனுதினமும் இழுத்திருக்க ஓடிக்கொண் டிருக்கிறது! ஊரில் அதுபோகும் பாதையிலே பாதித் தொலைவு

Posted in கவிதைகள் | Comments Off on தேர்ப்பவனி

நன்றி

என் ‘நா’ வயலைச் சாறி இழுத்துழுது அன்று ‘நீ’ நட்ட அருள்விதைகள் கடகடென்று இன்று முளைத்தெழுந்து ‘இம்’ மென்னும் முன்னாலே…

Posted in கவிதைகள் | Comments Off on நன்றி

மஞ்சட் கருக் கதிர்

எந்த வகைக்கோழி இட்டு அடைகாத்து வந்து பொரிக்குமுன்னர் வீணாய் உடைந்த ‘முட்டை- மஞ்சட் கரு’ வானில் மினுங்கிடுது சூரியனாய்?

Posted in கவிதைகள் | Comments Off on மஞ்சட் கருக் கதிர்

விதி?

என்னதான் தேசம் என்னதான் நீதி என்ன ஊர் போகிற போக்கு? எங்குபோய்ச் சேரும் எங்களின் வாழ்வு? இல்லை நாளை பற்றி நோக்கு. புன்னகை சாகும் போலிகள் சூழும் பொய்களைக் காத்திடும் ‘வாக்கு’.

Posted in கவிதைகள் | Comments Off on விதி?

சிறகு

முகிற் சிறகு அடித்துப் பறக்க முயலும் வான். புகைச் சிறகு அடித்துப் பொங்கி எழும் நெருப்பு. ஒளிச் சிறகு அடித்து ஊர்கிறது பகல்; கோடி குளிர்ச்சிறகு அடித்துக்

Posted in கவிதைகள் | Comments Off on சிறகு

பிழை சாடி எழுவோம் யாம்.

வாசலில் நின்று வறுமை துணிந்து வரவேற்பு பாடுது இன்று. வரும்படி கெட்டு கடன் உடன் பட்டு வாழ்வு தேய்ந்திழியுது சென்று. காசில்லை என்று கஜானா வரண்டு காலியாய் ஆனதால் மன்று

Posted in கவிதைகள் | Comments Off on பிழை சாடி எழுவோம் யாம்.

” எமது நிலத்தின் அன்றைய கவியரங்குகள் பற்றி அறிந்து வையுங்கள் ” – கவிஞர் த. ஜெயசீலன்

Posted in Video | Comments Off on ” எமது நிலத்தின் அன்றைய கவியரங்குகள் பற்றி அறிந்து வையுங்கள் ” – கவிஞர் த. ஜெயசீலன்

நிம்மதி வரச் சம்மதி.

நிம்மதி வரச் சம்மதி உனை நீண்ட நாட்களாய்த் தேடினேன். நேரிலே உனைக் காணவே நிதம் நெஞ்சினால் வரம் கேட்கிறேன். சம்மதித்து நீ வந்ததில்லை…ஏன் தான் என அறியாதுளேன்.

Posted in கவிதைகள் | Comments Off on நிம்மதி வரச் சம்மதி.

முயல்வு

எட்டிய என் எல்லையில் இருந்து அடுத்த எல்லைக்கு எட்டி நடக்கின்றேன்! இயங்குகிற என் காலும், உள்ளமும், இதயமும், உடலினது ஒத்துழைப்பும்,

Posted in கவிதைகள் | Comments Off on முயல்வு

இயற்கை, காலம் மீது அதிக நம்பிக்கையுள்ளது! ஈழம் தலை நிமிா்ந்து நிற்க பல அளுமைகள் காரணம்

Posted in Video | Comments Off on இயற்கை, காலம் மீது அதிக நம்பிக்கையுள்ளது! ஈழம் தலை நிமிா்ந்து நிற்க பல அளுமைகள் காரணம்

தமிழ்க்கவி

“கடவுளைக் காணலாம் கவிதையில்” என ஒரு கவி…இவன் பறைவதை அறிக. கனவையும் நனவையும் கண்டுரை செய்வதே கவிதையின் தொழில் இதைப் புரிக. விடயங் களுக்குள் வியப்புப் பலகண்டு விளக்கிடும் ‘நொடி’..கவி தெரிக.

Posted in கவிதைகள் | Comments Off on தமிழ்க்கவி

நாயகன்

தீயவர்கள் சேர்ந்து நின்று தீமை செய்யும் போதிலும் தேடியே துயர் விதைக்கத் திட்டம் தீட்டும் போதிலும் வாயினால் பழிப்புரைத்து மாயவைக்கும் போதிலும் வஞ்சகங்களால் தடைகள் காலிலிட்ட போதிலும் நீ நிமிர்ந்து நின்று கொண்டு நீதி நியாயம் கேட்கிறாய். நெஞ்சுரம் குறைந்திடாது நேர்மையோடு ஆர்க்கிறாய்.

Posted in கவிதைகள் | Comments Off on நாயகன்

யுத்தத்தின் பிள்ளைகள்! கண்டிப்பான அதிகாரியின் மறுபக்கம்!

Posted in Video | Comments Off on யுத்தத்தின் பிள்ளைகள்! கண்டிப்பான அதிகாரியின் மறுபக்கம்!