யாழ் அரசவைக் கவி

ஈழக் கவிதைவிருட்சத்தில்…நேற்றைக்கும்
இருந்த மூல வேரொன்றுபட்டதோ?
காலக் கறையான் அரிக்காக் கவிதந்த
கவிஞனின் முகம் கண்முன் கரைந்ததோ?
ஆழ்ந்தஅறிவும் புலமையும் கொண்ட…நம்
அரசவைக் கவி இன்றுமறைந்ததோ?
சீடனாகநான் சிலிர்க்கக்…கவி சொன்ன
செம்மலைத் தீயின் நாக்குச் சுவைத்ததோ?

கவிதை,நாடகம்,ஆய்வுஎனஎந்தக்
களத்திலும் முடிசூடியமன்னவன்.
அவையில் ஏறியெம் ஆழக் கவிதையின்
அடிமுடிகாட்டிவென்றமுருகையன்.
நவஉலகுக்கும் ஏற்றகருத்துக்கள்
நாசூக்காகச் சொல்லிவைத்தகுறுமுனி.
கவிதையாகினான் இன்று அவன்புகழ்
காலம் கடந்துமேவாழும் நிஜம்…இனி.

Leave a Reply