வாழ்விடமும் சுவாரஸ்யமும்

நான் விரும்பிக் கேட்ட எதுவுமே
என் வாழ்வில்
தோன்றாத போது சுவாசம் சுமையாக
ஓடிக் கரைகிறது
ஒவ்வொரு நொடிப்பொழுதும்.
நாம்விரும்பி நின்ற எவையுமே
நம் வாழ்வில்
தோன்றாத போது
வாழ்வே சுமையாக
ஓட மிகமுயன்று…நத்தையாக ஊர்கிறது
ஒவ்வொரு நொடிப்பொழுதும்!
என்விருப்பம் தாண்டி
எமது விருப்பங்கள்
ஒன்றும் பலிக்காத போதும் விரக்தியுற்று
என்னையோ எம்மையோ
மாய்க்கும் திராணியற்று
ஒண்டியே காத்திடுவோம்.. உயிரை எம்
உடலோடு!
என்னுடைய விருப்பை
எங்களது விருப்பத்தை
என்றும் ஈடேற்ற மாட்டேன்
எனத்தானும்
பிடிவாதம் பிடித்தபடி
எமக்கும் விடுதலையைத்
தரவும் விருப்பமின்றி காலம் கரைந்திடுது!
இந்தக் கணம் வரையும்
நாமும் நாமனைவர்களும்
நம்புகிற தெய்வமும் காலமும் ஒன்றுதானா?
தெய்வமும் காலமும் வேறுவேறா
சர்ச்சையிலே
ஏக்கங்கள் பசிபோல்
மீண்டும் மீண்டெழுவதால்
வாழ்வும் சுவாரஸ்யமும் குறையாமல் நகர்கிறது!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply