செய்நன்றி

 

எப்போதோ ஓர்நாள் என்றோ ஒருதடவை
என்னுடைய உணவின்
உண்ணத் தகுந்ததெல்லாம்
உண்டு….உண்ண முடியாத மீதிகளை
“உண்ணட்டும்” என்று
ஒருகவளம் வைத்ததற்காய்…
இன்றும் விசுவாசம் காட்டி
வால்குழைத்தபடி,
என்னுடைய காலடியே… ஏதோ
ஆபத் பாந்தவனின்
காலடியென் றெண்ணிக்
காவற் கடமைசெய்து
கல்லெறிந்து கலைத்தாலும்
சிறுபொழுதில் மீண்டுவந்து
என்முகத்தை ஏதோ…ஓர் ஏக்கமுடன் பார்க்கும்
இந்நாயை ஐந்தறிவுச் சீவனென்று
நன்றியுணர்வே
இல்லாத நாங்கள்
எப்படி உரைக்க ஏலும்?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply