போக்கு….வரவு ?

“தான் போனால் போதும்.
தான் மட்டுமே முந்திப்
போனாலே போது”மெனப் போகிறார்
ஒவ்வொருவர்களும்!
ஆறுதலாய்ப் போக ஆருக்கும் விருப்பமில்லை.
“தாமதித்துப் போனால் சுகப்பயணம்”…
புரியுதில்லை!
“வீதி விதிகளெவை?
வாகனங்கள் போவதெங்கே?
பாதசாரி என்னாவார்?
பக்கப் பயணிகட்கு
ஏதும் இடைஞ்சலுண்டா” எண்ணாமல்…
‘தான் முந்திப்
போனாலே போதும்’ என
அந்தரப்பட்டே விரைந்து
போகின்றார்….யாவரும் வீதியிலும்….
வாழ்க்கையிலும்!

Leave a Reply

You must be logged in to post a comment.

?>