சாட்சி

“மக்களி னுக்காக மக்களினால்
நடப்பது காண்
மக்களாட்சி!”
அதிலே மகுடம் புனைந்தவராய்க்
கொக்கரிப்போர்…தம்மவரைக் கொன்று,
அடாத்தாக
மண்ணைச் சுரண்டுவோர்க்கே வழக்குரைத்து,
தங்களது
கண்ணைத் தம் விரல்கொண்டே
களைந்து, ஊர்க்கு
நீதிசொல்லும்
விண்ணாணம் கண்டு
வெடிக்குது நம் இதயங்கள் !
வாழ்க்கை …சராசரி மனிதரது வாழ்வுரிமை …
வாழும் நிலத்தை மலடாக்கா ஓர் கொள்கை …
நாளையினைப் பற்றியநல் நம்பிக்கை …
அதுகடந்த
தூரநோக் குடைமை… இவை தொலைய
அதிகார
பீடங்கள் தமது பிழையை மறைப்பதற்கும் ,
சாமரங்கள் வீசுவோர்க்கு
சாதகங்கள் பார்ப்பதற்கும் ,
நீதிகேட்கும் குரல்வளையை நெரிப்பதற்கும் ,
கொள்ளைலாபம்
தேடுவோரைக் காப்பதற்கும் ,
தெளிவான சாட்சியாச்சு
தூத்துக்குடி சுட்ட தோட்டாக்கள்!
“மக்களாட்சி
தோற்ற”தெனக் கூவின
உயிர்துளைத்த வேட்டொலிகள்!!

Leave a Reply

You must be logged in to post a comment.

கவியரங்கக் கவிதைகள்
பெரியோர்கள் போற்றுதும்..
எனது புதிய பதிவுகள்
ஒலிப் “பதிவு”
ஒளிப்பதிவுவெளியீடுகள்

முகப்புத்தகத்தில் தொடர
வருகைதந்தோர்
  • 8This post:
  • 62097Total reads:
  • 45924Total visitors:
  • 0Visitors currently online:
?>