கடவுள் தான் நீங்கள்!

கடவுள் தான் நீங்கள்.
கலிகாலம் கண்கண்ட
கடவுள் தான் நீங்கள்.
காரணங்கள் உண்டு…
நீவிர்
வரமும் தருகின்றீர் சாபமும் இடுகின்றீர்.
வரவாயும் இருக்கின்றீர்
செலவாயும் இருக்கின்றீர்.
இன்பங்கள் துன்பங்கள் இரண்டும்
தருகின்றீர்.
அன்பையும் பொழிவீர்
அழிக்கவும் தயங்கீர்.
அருளையும் சுரக்கின்றீர்
மருளையும் புரக்கின்றீர்.
மிருதுவாயும் அணைக்கின்றீர்
கருவியாலும் மிரட்டுகிறீர்.
கருணை மழைபொழிவீர்
கழுத்தும் அறுத்திடுவீர்.
எரிப்பீரெம் குடிசைகளை
வீடு கட்டியும் கொடுப்பீர்.
நோயையும் தருவீர்
மருந்தும் வழங்கிடுவீர்.
போரையும் திணிப்பீர்
தீர்வையும் வழங்கிடுவீர்.
கடவுள் தான் நீங்கள் கலிகாலம்
கண்கண்ட
கடவுளர்தாம் நீங்கள்
வணங்குகிறோம் கலங்கி நாங்கள்!

Leave a Reply

You must be logged in to post a comment.

கவியரங்கக் கவிதைகள்
பெரியோர்கள் போற்றுதும்..
எனது புதிய பதிவுகள்
ஒலிப் “பதிவு”
ஒளிப்பதிவுவெளியீடுகள்

முகப்புத்தகத்தில் தொடர
வருகைதந்தோர்
  • 14This post:
  • 113070Total reads:
  • 82804Total visitors:
  • 1Visitors currently online:
?>