குறளோடு என் குரல் 2

இன்றைய ‘காப்ரேட்’ சாமிகளுக்காகவும், ஆ’சாமி’களுக்காகவும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னேயே திருவள்ளுவர் கூறியவை
அறத்துப்பால், துறவறவியல்,அதிகாரம் -கூடா ஒழுக்கம்
1. 2ம் குறள்
“வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன் நெஞ்சம்
தானறி குற்றம் படின்”.
ஒருவன் தான் அறிந்த குற்றத்தில் தெரிந்தே தன்மனம் ஈடுபடுவதை தடுக்கமுடியாதவன் எனில் வானை போன்ற உயர்ந்த தவக்கோலத்தால் அவனுக்கு என்ன பயன் கிடைக்கும்?
2. 3ம் குறள்
“வலி இல் நிலமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்து மேய்ந் தற்று”
மனத்தை தன் வழிப்படுத்தும் வலிமை இல்லாதவன் உயர் தவக்கோலம் பூண்பது பசு புலித்தோல் போர்த்து பயிரை மேய்வது போன்றது
3. 8ம் குறள்
“மனத்தது மாசுஆக மாண்டார் நீராடி
மறைந்தொழுகும் மாந்தர் பலர்”
மனத்தில் மாசு இருக்க பிறரின்முன் தவத்தால் மேன்மையானவர் போல் நீரில் மூழ்கி காட்டி மறைந்து ஒழுகும் மாந்தர் பலர்
4. 9ம் குறள்
“கணைகொடிது யாழ்கோடு செவ்விது ஆங்கு அன்ன
வினைபடு பாலால் கொளல்”
நேர்வடிவில் அம்பு தோன்றினும் அதன் செயல் கொடியது யாழ் வளைந்தது எனினும் அதன் பயன் இனிமையானது. இதுபோல தவம் செய்வவரையும் வடிவால் அன்றி அவர்களின் செயலால் அறிய வேண்டும்.
5. 10ம் குறள்
“மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின் ”
உயர்ந்தோர் தவத்துக்கு ஆகாது என்ற தீய ஒழுக்கங்களை விட்டால் புறத்தில் தலையை மொட்டை அடித்தோ தாடி வளர்த்தோ தவக்கோலம் பூண வேண்டிய அவசியம் இல்லை